OTT Release: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கிராமப்புற பின்னணியில் உருவான காதல் கதையை மையமாகக் கொண்ட ‘ஓ சுகுமாரி’ திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகிறது.
OTT Release: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கிராமப்புற பின்னணியில் உருவான காதல் கதையை மையமாகக் கொண்ட ‘ஓ சுகுமாரி’ திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகிறது.

Published on: August 7, 2026 at 12:44 pm
சென்னை, ஆக. 7 2026: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ‘ஓ சுகுமாரி’ திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகிறது. திரையரங்குகளில் ரசிகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படம், பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 7-ந்தேதி முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.
கிராமப்புற பின்னணியில் உருவான காதல் கதையை மையமாகக் கொண்ட ‘ஓ சுகுமாரி’ திரைப்படம் கடந்த ஜூலை 17-ந்தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை பரத் தர்ஷன் இயக்கியுள்ளார். கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் மகேஸ்வர ரெட்டி மூலி தயாரித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக திருவீர் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ஜான்சி, விஷ்ணு ஓய் லட்டு, ஆமணி, முரளிதர், ஆனந்த், அஞ்சிமாமா, சிவானந்த், கோட்டா ஜெயராம், கவிரெட்டி ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கிராமப்புற வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த காதல் திரைப்படம், குறிப்பாக குடும்ப பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகு தற்போது ஓடிடி ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது. ஆகஸ்ட் 7(இன்று) முதல் பிரைம் வீடியோவில் ‘ஓ சுகுமாரி’ படத்தை காணலாம்.
இதையும் படிங்க: ரியோ ராஜ் நடிப்பில் ராம் இன் லீலா.. ஆக.21 வெளியீடு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com