Special Train: திருநெல்வேலியில் இருந்து சென்னை தாம்பரம் பகுதிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
Special Train: திருநெல்வேலியில் இருந்து சென்னை தாம்பரம் பகுதிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

Published on: August 6, 2026 at 4:41 pm
சென்னை, ஆக.6, 2026: திருநெல்வேலி – சென்னை இடையேயான பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வே வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 6) காலை 8.00 மணி முதல் தொடங்கியுள்ளது.
அதன்படி, வண்டி எண் 06070 நெல்லை – தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ஆகஸ்ட் 13, 20, 27 ஆகிய வியாழக்கிழமைகளில் இரவு 11.35 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கத்தில், வண்டி எண் 06069 தாம்பரம் – நெல்லை அதிவிரைவு சிறப்பு ரயில் ஆகஸ்ட் 14, 21, 28 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 1.55 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1.00 மணிக்கு நெல்லை சென்றடையும்.
இந்த ரயில்கள் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். பயணிகளின் வசதிக்காக 22 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டடுக்கு குளிர்சாதன பெட்டி 1, மூன்றடுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் 8, தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் 7, இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் 4, மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் சரக்கு வாகனமும் அடங்கும்.
திருநெல்வேலி – தாம்பரம் இடையே அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது பயணிகளுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : 30 ஆயிரம் பெண்களுக்கு ஆடுகள் வழங்கும் திட்டம்.. தமிழ்நாடு விவசாய பட்ஜெட் முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com