எடப்பாடி பழனிசாமி கூட்டம்.. எஸ்.பி வேலுமணி, சி.வி சண்முகம் ஆப்செண்ட்!

Edappadi Palaniswami: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க கூட்டத்தை எஸ்.பி வேலுமணி, சி.வி சண்முகம் ஆகியோர் புறக்கணித்துள்ளார்கள்.

Published on: August 6, 2026 at 4:34 pm

சென்னை, ஆக.6, 2026: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் புறக்கணித்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆனால், அந்த கூட்டத்தில் இருவரும் கலந்து கொள்ளவில்லை.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக கூட்டணி அரசு, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. மே 10 அன்று முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து, மே 13 அன்று நடந்த நம்பிக்கைக்கோரும் தீர்மானத்தில் அதிமுகவைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதில் சில எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால், அதிமுக தரப்பில் சபாநாயகரிடம் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது. அதேபோல், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பும், கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.

பின்னர் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி, சபாநாயகரிடம் அளித்த மனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

எனினும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வந்தனர். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை அவர்கள் புறக்கணித்தனர்.

இன்று (ஆகஸ்ட் 05) தொடங்கிய சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் இருவரும் கலந்து கொள்ளவில்லை.

ஆனால், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சென்னை டூ பெங்களூரு.. பி.ஆர் சுந்தர் பாலியல் புகாரில் கைது!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com