மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி.. தமிழக பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு!

Govt Law College : மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி நிறுவப்படும் என தமிழக அரசு பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது.

Published on: August 5, 2026 at 2:58 pm

சென்னை, ஆக.5, 2026: தமிழக அரசு, மாணவர்களுக்கான தங்கும் விடுதி மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ‘தமிழ்நாடு மாணவர் தங்கும் விடுதி மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனம்’ (TNSHIC) என்ற பிரத்யேக அமைப்பை ரூ. 10 கோடி பங்கு மூலதனத்துடன் நிறுவவுள்ளது. இந்த நிறுவனம், ‘TN-SUDAR’ திட்டத்தின் கீழ் மாநிலத்தின் முக்கியக் கல்வி மையங்களில் 200 ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகளை உருவாக்கும்.

இந்த விடுதிகளில் 1 லட்சம் நவீன படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. திட்டம் DBFOT (Design, Build, Finance, Operate, Transfer) மாதிரியில் செயல்படுத்தப்படும். மொத்த மதிப்பீட்டுச் செலவு ரூ. 3,200 கோடி என கணிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த இரண்டு நிதியாண்டுகளில் ரூ. 640 கோடி மாநில மூலதனக் கட்டுமான மானியமாக வழங்கப்படும்.

புதிய விடுதி வளாகங்களில் முழுமையாகக் குளிரூட்டப்பட்ட பயிலரங்கங்கள், 24 மணி நேர பாதுகாப்பு, சுகாதாரமான சமையலறைகள் மற்றும் தானியங்கி ஒதுக்கீட்டு முறை ஆகியவை இடம்பெறும். இதன் மூலம், தனித்தனியாகப் பிரித்து அமைக்கப்பட்ட பழைய விடுதி முறையை மாற்றி, உயர்தர வசதிகள் கொண்ட ஒருங்கிணைந்த வளாகங்கள் உருவாக்கப்படுகின்றன.

மேலும், 2027-28 கல்வியாண்டில் மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி நிறுவப்பட உள்ளது. ‘School of Excellence in Law’ என்பதற்கு இணையான தரத்தில், மேம்பட்ட சட்டக் கல்வியை வழங்கும் இந்த கல்லூரி 300 மாணவர் சேர்க்கை இடங்களுடன் செயல்படவுள்ளது.

இதையும் படிங்க : பெருந்தலைவர் காமராஜர் உண்டு உறைவிடப் பள்ளிகள்.. விஜய் அரசு அறிவிப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com