போதை இல்லா இந்தியா… பிரதமர் மோடி தொடங்கிய புதிய மக்கள் இயக்கம்!

Nasha Mukt Bharat: ‘வளர்ந்த பாரதம்’ இலக்கை அடைய இளைஞர்கள் உடல், மன ரீதியாக வலிமையாக இருக்க வேண்டும் என்றும், போதைப்பொருட்களிலிருந்து விலகி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

Published on: August 2, 2026 at 3:19 pm

புதுடெல்லி, ஆகஸ்ட் 2 2026: ‘நஷா முக்த் யுவா ஃபார் விக்சித் பாரத் சங்கல்ப் அபியான்’ என்ற போதைப்பொருள் ஒழிப்பு மக்கள் பங்கேற்பு இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், வளர்ந்த இந்தியா (Viksit Bharat) என்ற இலக்கை நோக்கி நாடு முன்னேறி வரும் நிலையில், இளைஞர்கள் உடல் ரீதியாக ஆரோக்கியமாகவும், மன ரீதியாக வலிமையாகவும், தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்றார். போதைப்பொருட்களிலிருந்து விலகி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதே அவர்களின் எதிர்காலத்திற்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, அடுத்த 100 வாரங்கள் நாடு முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் மக்கள் பங்கேற்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். போதைப்பழக்கம் ஒருவரின் கனவுகளையும், தொழில் வாழ்க்கையையும், குடும்பத்தையும் சீரழிப்பதுடன், நாட்டின் வலிமையையும் பாதிக்கிறது என்றார். சமூக அவப்பெயருக்கு அஞ்சி போதைப்பழக்கத்தை மறைக்காமல், குடும்பத்தினர் உடனடியாக மருத்துவ நிபுணர்களின் உதவியை நாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், தனிமையில் இருப்பது, இயல்பற்ற நடத்தை, உரையாடலைத் தவிர்ப்பது, அடிக்கடி வெளியில் தங்குவது, தொடர்ந்து பணம் கேட்பது போன்றவை போதைப்பழக்கத்தின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம் என்றும் பிரதமர் எச்சரித்தார்.

பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மாணவர்களிடம் போதைப்பொருள் தீமைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்கள், மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், MY Bharat, தேசிய சேவைத் திட்ட (NSS) தன்னார்வலர்கள், மாணவர்கள், இளைஞர் அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் ஆன்மிக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க : நள்ளிரவில் குளியலறைக்குள் 7 அடி முதலை… அலடியடித்து ஓட்டம் பிடித்த குடும்பத்தினர்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com