India Wins Three Medals : அஜர்பைஜானில் நடைபெற்று வரும் 17 வயதுக்குட்பட்ட உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை நிகிதா செஹ்ராவத் வெள்ளிப் பதக்கம் வென்றார். காம்னா பாபல் மற்றும் கரிமா தலா வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றினர்.
India Wins Three Medals : அஜர்பைஜானில் நடைபெற்று வரும் 17 வயதுக்குட்பட்ட உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை நிகிதா செஹ்ராவத் வெள்ளிப் பதக்கம் வென்றார். காம்னா பாபல் மற்றும் கரிமா தலா வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றினர்.

Published on: July 31, 2026 at 2:32 pm
பாகு, ஜூலை 31 2026: அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்று வரும் 17 வயதுக்குட்பட்ட உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை நிகிதா செஹ்ராவத் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். நேற்று நடைபெற்ற 57 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில், அமெரிக்காவின் எபெனேசா எலிசன்-இடம் 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தியடைந்தார்.
49 கிலோ எடைப்பிரிவுக்கான வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்திய வீராங்கனை காம்னா பாபல், ரஷ்யாவின் இரினா சைடீவாவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
73 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்தியாவின் கரிமா, ஸ்பெயினின் பவுலா பெனைஷா பெரெஸ்-ஐ தொழில்நுட்ப முன்னிலை (Technical Superiority) அடிப்படையில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் மகளிர் பிரிவில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று சிறப்பான சாதனை படைத்துள்ளது.
இதையும் படிங்க: காமன்வெல்த்.. வெண்கலம் வென்ற தந்தை, வெள்ளி வென்ற மகன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com