ரயில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 1 முதல் அமல்.. முழு விவரம்!

Tatkal Ticket Booking: இந்திய ரயில்வே, தட்கல் டிக்கெட் முன்பதிவில் முக்கிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது; இந்த மாற்றம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Published on: July 30, 2026 at 1:35 pm

சென்னை, ஜூலை 30, 2026: இந்திய ரயில்வே துறை, தட்கல் டிக்கெட் முன்பதிவில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் புதிய நடைமுறையை ஆகஸ்ட் 1 முதல் அமல்படுத்துகிறது. இதன்படி, ரயில் நிலைய கவுண்டர்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவோருக்கு டோக்கன் வழங்கப்படும்.

ஏசி படுக்கை வசதிக்கான முன்பதிவிற்கு காலை 8.30 மணி முதல் 9 மணி வரை, சாதாரண படுக்கை வசதிக்கான முன்பதிவிற்கு காலை 9.30 மணி முதல் 10 மணி வரை டோக்கன்கள் வழங்கப்படும். டோக்கன் வரிசையின் அடிப்படையில், தட்கல் சேவை தொடங்கியதும் முன்பதிவு செய்யப்படும். ஏசி முன்பதிவிற்கு அதிகபட்சம் 10 டோக்கன்களும், சாதாரண படுக்கை முன்பதிவிற்கு அதிகபட்சம் 15 டோக்கன்களும் வழங்கப்படும்.

டோக்கன் பெறும்போது, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற அடையாள ஆவணங்களை காண்பிக்க வேண்டும். இதன் மூலம், இடைத்தரகர்களின் தலையீட்டை கட்டுப்படுத்தவும், கடைசி நேரத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் ரயில்வே துறை முயற்சிக்கிறது.

இந்த நடைமுறை முதலில் மேற்கு மத்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் சில ரயில் நிலையங்களில் மட்டுமே அமல்படுத்தப்படும். அதன் வெற்றியைத் தொடர்ந்து, பிற கோட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

பயணிகள், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது நேரத்தைச் சரியாகக் கவனித்து, டோக்கன் பெறும் நடைமுறையை பின்பற்ற வேண்டும். இதனால், முன்பதிவு செயல்முறை சீராக நடைபெறும், மேலும் பயணிகள் சிரமமின்றி டிக்கெட்டைப் பெற முடியும்.

இதையும் படிங்க : TVK எம்.எல்.ஏ குதிரைபேர வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படுமா? ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com