Jumanji: Open World: ‘ஜுமான்ஜி: ஓபன் வேர்ல்ட்’ திரைப்படத்தின் முதல் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
October 29, 2026
Jumanji: Open World: ‘ஜுமான்ஜி: ஓபன் வேர்ல்ட்’ திரைப்படத்தின் முதல் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: July 29, 2026 at 1:26 pm
புதுடெல்லி, ஜூலை 29, 2026: ‘ஜுமான்ஜி: ஓபன் வேர்ல்ட்’ திரைப்படத்தின் முதல் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய பாகங்களில், விளையாட்டுக்குள் மனிதர்கள் சிக்கிக்கொள்வதை மையமாகக் கொண்டிருந்த கதை, இம்முறை முற்றிலும் மாறுபட்ட திருப்பத்தை எடுக்கிறது. விளையாட்டின் அவதாரங்களே நிஜ உலகிற்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.
டுவைன் ஜான்சன், கெவின் ஹார்ட், ஜாக் பிளாக் மற்றும் கேரன் கில்லன் நடித்துள்ள இந்த மூன்றாவது பாகம், ‘ஜுமான்ஜி’ ரீபூட் தொடரின் இறுதி அத்தியாயமாகும். நகைச்சுவை, சண்டைக்காட்சிகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் (glitches) காரணமாக உருவாகும் சுவாரஸ்யமான சூழல்கள் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, டைனோசர் உணவகத்தை உடைத்து வருவது, கதாபாத்திரங்கள் தெருக்களில் ஓடுவது போன்ற காட்சிகள் ரசிகர்களை கவரும்.
ஸ்பென்சர் மற்றும் அவனது நண்பர்கள், வீடியோ கேம் கதாபாத்திரங்கள் ‘டெமோ மோட்’-இல் சிக்கிக்கொண்டதை உணரும்போது பிரச்சனை தொடங்குகிறது. சக்திவாய்ந்த அவதாரங்களாக இல்லாமல், தங்களைச் சுற்றியுள்ள சூழலைப் புரிந்துகொள்ள முயலும் கதாபாத்திரங்கள், நகைச்சுவையான தருணங்களை உருவாக்குகின்றன.
அவர்களை மீண்டும் ஜுமான்ஜி உலகிற்குள் அனுப்பும் முயற்சி தோல்வியடைய, நிலைமை இன்னும் சிக்கலாகிறது. ஸ்பென்சரின் தாயார் ஜானிஸ், ஜுமான்ஜி உலகிற்குள் சென்று டாக்டர் பிரேவ்ஸ்டோனின் அவதாரமாக மாறுகிறார். இதனால், ஸ்பென்சர் மற்றும் அவனது தாயார் இடையே உருவாகும் வாக்குவாதம், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளை ஒருங்கே வெளிப்படுத்துகிறது.
டுவைன் ஜான்சன் நடித்திருக்கும் பிரேவ்ஸ்டோன் கதாபாத்திரம் திடீரென ஸ்பானிஷ் உச்சரிப்பில் பேசுவது, கேரன் கில்லன் நடித்த ரூபி ரவுண்ட்ஹவுஸ் மற்றும் மற்ற கதாபாத்திரங்களின் சாகசங்கள், இந்த படத்தை கிறிஸ்துமஸ் காலத்தில் குடும்பம் முழுவதும் ரசிக்கக்கூடிய விறுவிறுப்பான அனுபவமாக மாற்றும். ‘ஜுமான்ஜி: ஓபன் வேர்ல்ட்’ 2026 டிசம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க : ‘ராமர் கதாபாத்திரத்துக்கு சரியான நடிகர் இல்லை’.. ரன்பீர் கபூர்

Pregnancy Exercise: கர்ப்பிணிகள் உடற்பயிற்சியின்போது கவனிக்க வேண்டிய 5 அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

Janhvi Kapoor Peddi Controversy: ‘பெத்தி’ படத்தில் பெண்கள் சித்தரிப்பு சர்ச்சை எழுந்த நிலையில், வருத்தம் தெரிவித்துள்ளார் ஜான்வி கபூர்.

Paramedical Courses: துணை மருத்துவப் படிப்புகளில் 3,878 கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இணையதளம் முடங்கியதால் மாணவர்கள் அவதியுற்றனர்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com