தி.மு.க அறக்கட்டளை சொத்து விவரங்கள் மறைப்பு.. மு.க ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு!

M K Stalin: தி.மு.க அறக்கட்டளை சொத்து விவரங்கள் மறைக்கப்பட்ட விவகாரத்தில், மு.க ஸ்டாலினுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Published on: July 27, 2026 at 3:53 pm

சென்னை, ஜூலை 27, 2026: திமுக தலைவர் மு.க ஸ்டாலின், 2026 சட்டமன்ற தேர்தலில் கௌத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர் வேட்புமனுவில், தி.மு.க அறக்கட்டளை தலைவராக உள்ள சொத்து விவரங்களை மறைத்ததாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை மு.க ஸ்டாலினுக்கு எதிராக வேட்பாளர் சிவஞானசம்பந்தம் என்பவர் தாக்கல் செய்துள்ளார். அதில், மு.க ஸ்டாலின் தி.மு. அறக்கட்டளை தலைவராக உள்ள விவரம், சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.க. ஸ்டாலின் தன்னிடம் ரூ.10,000 ஆயிரம் மட்டுமே ரொக்கம் இருப்பதாக தன் வேட்புமனு பிரமாண பத்திரத்தில் தெரிவித்து இருந்தார். இந்தத் தேர்தலில் மு.க ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ் பாபு என்பவரிடம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

இந்த நிலையில் மு.க ஸ்டாலின் சொத்து விவரங்களை மறைத்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில், முன்னாள் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சில விவரங்களை மறைத்ததாகக் கூறப்படும் புகாரை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு (EC) உத்தரவிடக் கோரப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 125A-ன் கீழ் அவர்மீது குற்றவியல் நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் என மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த மனுவை, 2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூரில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளராக ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட 73 வயதான வழக்கறிஞர் டி. சிவஞானசம்பந்தன் தாக்கல் செய்துள்ளார். தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு ஜூலை 27, 2026 அன்று இந்த வழக்கை விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :டாஸ்மாக்-கில் இருந்து 100 மீட்டரில் மதுக்கூடம்.. தமிழக அரசு ஒப்புதல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com