Holiday Rush at Tiruchendur : ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
Holiday Rush at Tiruchendur : ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

Published on: July 26, 2026 at 12:28 pm
தூத்துக்குடி, ஜூலை 26, 2026: விடுமுறை நாளையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
பக்தர்கள் வருகை இன்று அதிகரித்தது. அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.
கோவிலில் பொதுத் தரிசன வரிசை நீண்ட தூரம் வரை நீடித்ததால், பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மூலவர் சண்முகநாதர் மற்றும் தெய்வானை, வள்ளி சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்தை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசித்தனர். வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“விடுமுறை காரணமாக கூட்டம் அதிகமாக இருந்தாலும், நீண்ட நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்ததில் மனநிறைவு கிடைத்தது” என்று பக்தர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இ.பி.எஃப் கணக்கில் எப்போது வட்டி நிற்கும்? ஓய்வூதிய சேமிப்பை எப்படி அதிகரிக்கலாம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com