ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லாபம் ரூ.7,764 கோடியாக உயர்வு… ஐபிஓ நோக்கி அடுத்த முக்கிய கட்டம்!

Jio Q1: சந்தாதாரர் எண்ணிக்கை, சராசரி பயனர் வருவாய் (ARPU) மற்றும் டிஜிட்டல் சேவைகளின் வளர்ச்சி காரணமாக நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: July 18, 2026 at 4:57 pm

புதுடெல்லி, ஜூலை 18 2026: ரிலையன்ஸ் குழுமத்தின் டிஜிட்டல் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் (Jio Platforms Limited – JPL), 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.7,764 கோடி நிகர லாபம் (PAT) ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் பதிவான ரூ.7,110 கோடியுடன் ஒப்பிடும்போது 9.2 சதவீதம் அதிகமாகும். இதே காலகட்டத்தில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 11.8 சதவீதம் உயர்ந்து ரூ.39,173 கோடியாக பதிவாகியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி, மொபிலிட்டி, வீட்டு பிராட்பேண்ட் மற்றும் நிறுவன சேவைகளில் தொடர்ச்சியான வளர்ச்சி காரணமாக டிஜிட்டல் சேவை வணிகம் வலுவாக செயல்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் பங்குச் சந்தை பட்டியலிடலுக்கான (IPO) முக்கிய கட்டமாக செபி (SEBI)யிடம் வரைவு சிவப்பு அறிக்கையை (DRHP) தாக்கல் செய்திருப்பதாகவும், இது இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியில் முதலீட்டாளர்கள் பங்கேற்கும் முக்கிய வாய்ப்பாக அமையும் என்றும் அவர் கூறினார்.

ஜியோவின் தொலைத்தொடர்பு பிரிவான ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் (RJIL), முதல் காலாண்டில் ரூ.7,167 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதுடன், அதன் செயல்பாட்டு வருவாய் ரூ.34,212 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு பயனரிடமிருந்து கிடைக்கும் சராசரி மாதாந்திர வருவாய் (ARPU) கடந்த ஆண்டின் ரூ.208.8-இல் இருந்து ரூ.215.6 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 12 மாதங்களில் கட்டண உயர்வு எதுவும் இல்லாமல் இந்த வளர்ச்சி கிடைத்துள்ளதாக ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் தலைமை வியூக அதிகாரி அன்ஷுமன் தாக்கூர் தெரிவித்தார்.

நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை கடந்த ஆண்டின் 49.8 கோடியில் இருந்து 53.3 கோடியாக உயர்ந்துள்ளது. 5ஜி சேவைகள், நிலையான பிராட்பேண்ட் (FTTH), டிஜிட்டல் சேவைகள், OTT, கிளவுட் கேமிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சேவைகள் ஆகியவற்றின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவையை விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக 1,600 குறைந்த உயரப் பூமி சுற்றுப்பாதை (LEO) செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான திட்டமும் முன்னேற்றத்தில் இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ‘விக்ரம்-1’… இந்திய தனியார் விண்வெளித் துறையின் புதிய யுகம் தொடங்கியது!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com