Swasika’s Love for Cinema : நடிகை ஸ்வாசிகாவுக்கு, சினிமா மீதான மோகம் 10ஆம் வகுப்பு படிக்கும்போதே ஏற்பட்டுள்ளது.
Swasika’s Love for Cinema : நடிகை ஸ்வாசிகாவுக்கு, சினிமா மீதான மோகம் 10ஆம் வகுப்பு படிக்கும்போதே ஏற்பட்டுள்ளது.

Published on: July 10, 2026 at 8:55 pm
சென்னை, ஜூலை 10, 2026: நடிகை ஸ்வாசிகா, ‘ஜே.எஃப்.டபிள்யூ’ என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், 17 வயதில் சினிமா கனவுகளுடன் சென்னைக்கு வந்தபோது பல போலி ஆடிஷன்கள் மற்றும் மோசடிகளுக்கு ஆளானதாக வெளிப்படுத்தியுள்ளார். ‘வைகை’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அவர், முதல் ஆடிஷனிலேயே கதாநாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் சினிமாவில் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், அந்த நம்பிக்கை ஏமாற்றமாகவே மாறியது.
பத்தாம் வகுப்பு முடித்த பிறகு குடும்பத்தினரின் எதிர்ப்புகளையும் மீறி சென்னைக்கு வந்த ஸ்வாசிகா, வாய்ப்புகள் கிடைக்காததால் கடுமையான மன அழுத்தத்திற்கும் ஆளானார். ஆடிஷன் என்ற பெயரில் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றபோது, சில இடங்கள் ரவுடிகளின் பதுங்குமிடமாகவே தோன்றியதாகவும் அவர் கூறினார். பின்னர் தான் அவை போலி ஆடிஷன்கள் என்பதை உணர்ந்ததாகவும், தானும் தனது அம்மாவும் பலமுறை ஏமாற்றப்பட்டதாகவும் நினைவு கூர்ந்தார்.
“எங்களுக்குத் தெரிந்தது மணிரத்னம் சார், பாலா சார் போன்ற சில இயக்குநர்களை மட்டுமே. மற்றவர்களின் பெயரோ முகமோ தெரியாது. அதைப் பயன்படுத்தி, ‘முருகதாஸை பார்க்க வைக்கிறோம்’, ‘லிங்குசாமியை அறிமுகப்படுத்துகிறோம்’ என்று கூறி எங்களை அணுகினர். கையில் ஒரு லட்சம் ரூபாய் கொண்டு வந்தால் சினிமாவில் வாய்ப்பு நிச்சயம் என்று கூறினர். அதை நம்பி, அம்மா தங்க நகைகளை விற்று பணம் கொடுத்தார். ஆனால் பணம் கொடுத்த பிறகு அந்த நபரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேனேஜர் எங்களை ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டார்” என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க : டென்னிஸ் மைதானம் வந்த அழகுப் புயல் பிரியங்கா சோப்ரா.. ரசிகர்கள் ஆரவாரம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com