ஜே.என்.யூ திருவள்ளூவர் சிலையை திறக்க வாருங்கள்.. முதல்வர் விஜய்க்கு துணைவேந்தர் நேரில் அழைப்பு!

CM Vijay at JNU : டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு (ஜே.என்.யூ) பல்கலைக்கழகத்தில் திருவள்ளூவர் சிலையை தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் திறந்து வைக்கிறார்.

Published on: July 7, 2026 at 8:46 pm

சென்னை, ஜூலை 7, 2026: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு தமிழக முதலமைச்சர் விஜய் அழைக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சி தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை தேசிய அளவில் வலியுறுத்தும் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.

டெல்லி ஜே.என்.யூ முதல் பெண் தமிழ் துணைவேந்தரான பேராசிரியர் சாந்திஸ்ரீ, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை (ஜூலை 6, 2026) சந்தித்துப் பேசினார். அப்போது, பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளூவர் சிலையை திறந்துவைக்க கோரிக்கை விடுத்தார். மேலும், ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தமிழை பாடமாக எடுத்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும், 15 மாநிலங்கள் 6 கண்டங்களில் இருந்தும் ஜே.என்.யூ.-வில் தமிழ் படிக்க வருகின்றனர். இவர்கள் பாரம்பரிய தமிழ் மொழியை பயில தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்றார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள இந்த திருவள்ளூவர் சிலை தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல்? தேர்தல் வெற்றிக்கு எதிராக வழக்கு!

ஜே.என்.யூ திருவள்ளூவர் சிலையை திறக்க வாருங்கள்.. முதல்வர் விஜய்க்கு துணைவேந்தர் நேரில் அழைப்பு! CM Vijay at JNU

ஜே.என்.யூ திருவள்ளூவர் சிலையை திறக்க வாருங்கள்.. முதல்வர் விஜய்க்கு துணைவேந்தர் நேரில் அழைப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com