116 வயது பாட்டி.. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரை.. சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு!

116-Year-Old Climbs Tirupati Steps : சென்னையை சேர்ந்த 116 வயது மூதாட்டி நவநீதம்மா, திருப்பதி மலையில் உள்ள 3,550 படிக்கட்டுகளை ஏறி ஏழுமலையானை தரிசித்தார்.

Published on: July 6, 2026 at 5:20 pm

திருப்பதி, ஜூலை 6, 2026: சென்னையை சேர்ந்த 116 வயது மூதாட்டி நவநீதம்மா, திருப்பதி மலையில் உள்ள 3,550 படிக்கட்டுகளை ஏறி ஏழுமலையானை தரிசிக்க வந்தார். அவரது வயதையும், உறுதியையும் பார்த்து அங்கு இருந்த பக்தர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

இந்த செய்தி முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கவனத்தையும் ஈர்த்தது. உடனடியாக அவர் உத்தரவிட்டதால், கோவில் நிர்வாகம் நவநீதம்மாவுக்கு ராஜமரியாதையுடன் வி.வி.ஐ.பி பிரேக் தரிசனத்தை வழங்கியது. இதனால், அவர் எந்த சிரமமும் இல்லாமல் நேரடியாக சுவாமி தரிசனம் செய்யும் வாய்ப்பு பெற்றார்.

நன்றி ஏ.என்.ஐ.

மூதாட்டியின் உறுதியும், பக்தியும் அனைவருக்கும் ஒரு ஊக்கமாக அமைந்தது. 116 வயதிலும், தனது பக்தி உணர்வால் மலையை ஏறி வந்தது, பக்தர்களிடையே பெரும் பேச்சு பொருளாக மாறியது.

திருப்பதி கோவில் நிர்வாகம், முதல்வரின் உத்தரவின்படி, நவநீதம்மாவுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்தது. அவரது தரிசனம், பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், மரியாதையையும் ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : இந்தோனோசியாவில் உள்ள 10ஆம் நூற்றாண்டு சிவாலயம் புதுப்பிப்பு.. பிரதமர் மோடி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com