ரயில் விபத்தில் யானைகளை பாதுகாக்க ஏ.ஐ தொழில்நுட்பம்.. இந்திய ரயில்வே அறிமுகம்

AI to Save Elephants : ரயில் விபத்துகளில் யானைகளை பாதுகாக்க ஏ.ஐ தொழில்நுட்பத்தை இந்திய ரயிலவே அறிமுகப்படுத்தியுள்ளது.

Published on: July 6, 2026 at 4:05 pm

புதுடெல்லி, ஜூலை 6, 2026: இந்தியன் ரயில்வே, யானைகளை ரயில் விபத்துகளில் இருந்து காக்கும் நோக்கில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமான GAJRAJ SURAKSHA அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. தண்டவாளங்கள் அருகே யானைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து உடனடியாக எச்சரிக்கை அனுப்பும் திறன் கொண்ட இந்த அமைப்பு, வனவிலங்குகளை பாதுகாக்கும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.

ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் மூலம் செயல்படும் இந்த AI சிஸ்டம், 99.5% துல்லியத்துடன் யானைகளை கண்டறியும் திறன் பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தண்டவாளம் அருகே யானைகள் வந்ததும், உடனடியாக ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு அலர்ட் அனுப்பப்படும். இதனால் ரயிலின் வேகத்தை குறைத்து, விபத்துகளைத் தவிர்க்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.

இந்த தொழில்நுட்பம், யானைகள் அதிகமாகச் செல்லும் பகுதிகளில் முதன்மையாக பயன்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில், யானைகள் தண்டவாளம் கடக்கும் சம்பவங்கள் அதிகம் நிகழ்வதால், இந்த AI அமைப்பு அங்கு பெரும் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் ரயில்வே பாதுகாப்பு ஆகிய இரண்டையும் ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முயற்சி, இந்திய ரயில்வேயின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது. யானைகள் உயிரிழப்பைத் தடுக்கும் நோக்கில், இந்த AI அமைப்பு எதிர்காலத்தில் மேலும் பல இடங்களில் விரிவாக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : ககன்யான் திட்டத்தில் புதிய மைல்கல்… ஒருங்கிணைந்த பாராசூட் சோதனையில் இஸ்ரோ வெற்றி!

100 ஆண்டுகளுக்கு முன்பு நீராவி கப்பல் விபத்து.. தீவில் குடியேறிய எலிகள்.. கூண்டோடு அழிந்த 5 இனங்கள்.. அதிர்ச்சி தகவல்! Black rats

100 ஆண்டுகளுக்கு முன்பு நீராவி கப்பல் விபத்து.. தீவில் குடியேறிய எலிகள்.. கூண்டோடு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com