Ayothya Ram Temple Scam : ராமர் கோவில் நன்கொடை விவகாரத்தில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் உறுதியளித்துள்ளார்.
Ayothya Ram Temple Scam : ராமர் கோவில் நன்கொடை விவகாரத்தில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் உறுதியளித்துள்ளார்.

Published on: July 2, 2026 at 1:02 pm
லக்னோ, ஜூலை 2, 2026: உத்தரப் பிரதேசத்தில் ராமர் கோயில் நன்கொடை விவகாரம் தொடர்பான விசாரணை காலத்தை அம்மாநில முதலமை்சர் யோகி ஆதித்யநாத் 15 நாள்கள் நீட்டித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) மேற்கொண்ட விசாரணை இன்னும் தொடர்கிறது. இதனால், குற்றவாளிகள் காப்பாற்றப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்வைத்துள்ளார்.
அவர், இந்த விசாரணை நீட்டிப்பு அரசியல் நோக்கத்துடன் செய்யப்படுவதாகவும், உண்மையான குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இனி, கோயில் நிர்வாகம் தொடர்பான விஷயங்களை மண்டல ஆணையர் நேரடியாக கவனிக்க உள்ளார். கோயிலில் ஏற்பட்ட திருட்டுச் சம்பவங்களை காவல் துறை கண்ணோட்டத்தில் ஐ.ஜி. (வரம்பு) அதிகாரி விசாரிக்கிறார். இதனால், கோயிலில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகத் தீர்மானங்கள் குறித்து அதிகாரிகள் நேரடியாகக் கண்காணிக்க வாய்ப்பு கிடைக்கிறது.
மேலும், இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயில் நன்கொடை விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகள், விசாரணை நீட்டிப்பு, மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ளும் புதிய நடவடிக்கைகள் அனைத்தும் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. எதிர்க்கட்சிகள், விசாரணை வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. அதேசமயம், அரசு, குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்று உறுதியளிக்கிறது.
இதையும் படிங்க : டெல்லி ஜந்தர் மந்தரில் பரபரப்பு.. சோனம் வான்சுக் உண்ணாவிரதம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com