12% முதல் 7.10% ஆக PPF வட்டி விகிதம் சரிவு.. முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வம் குறைய காரணம் என்ன?

PPF Interest Rate Drops : பி பி எஃப் வட்டி விகிதம் கடந்த காலங்களில் 12 சதவீதம் வரை இருந்துள்ளது.

Published on: June 29, 2026 at 12:56 pm

சென்னை ஜூன் 29, 2026; ஒரு காலத்தில் முதலீட்டாளர்களின் முதன்மையான தேர்வாக இருந்த பொது வருங்கால வைப்பு நிதி (PPF) இன்று அதன் ஈர்ப்பு குறைந்து வருகிறது. 1980களில் 12% வருமானம் அளித்த இந்தத் திட்டம், தற்போது 7.1% வட்டி விகிதத்தில் மட்டுமே உள்ளது. வட்டி விகிதக் குறைவு, புதிய வரி முறை, முதலீட்டாளர்களின் விருப்பங்களில் ஏற்பட்ட மாற்றம் ஆகியவை இதன் முக்கியத்துவத்தை குறைத்துள்ளன.

மியூச்சுவல் ஃபண்ட் எஸ் ஐ பி (SIP)-களின் வளர்ச்சி, பங்குச் சந்தை முதலீடுகள், மற்றும் அதிக வருமானம் தரும் புதிய நிதி கருவிகள், PPF-ஐ பின்தள்ளியுள்ளன. குறிப்பாக, நீண்டகாலத்தில் அதிக வருமானம் தரும் Equity Mutual Funds, முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இதனால், PPF-இல் முதலீடு செய்வோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

புதிய வரி முறைமை (New Tax Regime) அறிமுகமானதால், PPF-இன் வரிச்சலுகை ஈர்ப்பு குறைந்துள்ளது. பழைய வரி முறையில் 80C பிரிவின் கீழ் கிடைத்த வரிச்சலுகை, புதிய முறையில் பெரிதாக பயனளிக்கவில்லை. இதனால், வரிச்சலுகைக்காக PPF-ஐ தேர்வு செய்திருந்தவர்கள், தற்போது மாற்று வழிகளைத் தேடுகின்றனர்.

இருப்பினும், பாதுகாப்பான முதலீடு விரும்பும், குறைந்த ஆபத்து கொண்ட நீண்டகால சேமிப்பை நாடும் முதலீட்டாளர்களுக்கு PPF இன்னும் ஒரு நல்ல தேர்வாகவே உள்ளது. அரசு ஆதரவு பெற்ற திட்டமாக இருப்பதால், மூலதன பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. எனவே, ஆபத்தைத் தவிர்க்க விரும்பும், நிலையான வட்டி வருமானத்தை நாடும் முதலீட்டாளர்கள் தொடர்ந்து PPF-இல் முதலீடு செய்வதை பரிசீலிக்கலாம்.

இதையும் படிங்க கடல் மார்க்கமாக வெளிநாடு செல்லும் இந்திய மாம்பழங்கள்.. விவசாயிகள் ஹேப்பி அண்ணாச்சி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com