அக்ஷய் குமாரின் வெல்கம் டு தி ஜங்கிள்.. ₹36 கோடி வசூல்.. பாக்ஸ் ஆபிஸில் எப்படி?

Welcome to the Jungle : ஹாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் வெல்கம் டு தி ஜங்கிள் திரைப்படம் இரண்டாம் நாளில், ரூபாய் 36 கோடி வசூல் நடத்தியுள்ளது.

Published on: June 28, 2026 at 4:17 pm

மும்பை ஜூன் 28, 2026;அக்‌ஷய் குமார் நடித்த ‘வெல்கம் டு தி ஜங்கிள்’ இரண்டாம் நாள் வசூல் ₹36 கோடியைக் கடந்துள்ளது. ஜூன் 26, 2026 அன்று வெளியான இந்த நகைச்சுவை-செயல் திரைப்படம், ‘வெல்கம்’ தொடரின் மூன்றாவது பாகமாகும். முதல் இரண்டு நாட்களில் இந்தியாவில் ₹36.27 கோடி நெட் வசூல், உலகளவில் ₹57.5 கோடி வசூல் செய்துள்ளது.

அஹ்மத் கான், இயக்கியுள்ள இந்த படத்தில் அக்‌ஷய் குமார், சுனில் ஷெட்டி, பரேஷ் ராவல், ஜாக்லின் பெர்னாண்டஸ், திஷா படானி, அர்ஷத் வார்சி, ஜானி லிவர், ராஜ்பால் யாதவ் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.
இந்தப் படம் ரூபாய் 250 முதல் 300 கோடி செலவில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்திற்கு, மிக்ஸ்டான விமர்சனங்கள் இருந்தாலும், குடும்ப ரசிகர்கள் மற்றும் ‘வெல்கம்’ தொடரின் ரசிகர்கள் பெருமளவில் திரையரங்குகளுக்கு வருகை தந்துள்ளனர்.

நோஸ்டால்ஜியா, நகைச்சுவை கலவையால், வார இறுதியில் வசூல் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க எம்ஜிஆரின் அரசியல் வாரிசு.. திரைக்கதை மன்னன்.. யார் இந்த கே. பாக்யராஜ்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com