K. Bhagyaraj : மறைந்த இயக்குனர் கே பாக்யராஜின் உடல் நாளை (ஜூன் 28, 2026) சென்னையில் தகனம் செய்யப்படுகிறது.
K. Bhagyaraj : மறைந்த இயக்குனர் கே பாக்யராஜின் உடல் நாளை (ஜூன் 28, 2026) சென்னையில் தகனம் செய்யப்படுகிறது.

Published on: June 27, 2026 at 2:08 pm
சென்னை ஜூன் 27, 2026; தமிழ் திரைப்பட உலகின் பிரபல இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களின் உடல் நாளை (ஜூன் 28, 2026 ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1.30 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் அனைவரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாக்யராஜ், தமிழ் சினிமாவில் திரைக்கதை மன்னன் என அழைக்கப்பட்டவர். 1970களில் பாரதிராஜா இயக்குநரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர், பின்னர் ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து ‘அந்த 7 நாட்கள்’, ‘முந்தானை முடிச்சு’, ‘அவசர போலீஸ் 100’, ‘எங்க சின்ன ராசா’ போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கி நடித்தார். குடும்பக் கதைகள், நகைச்சுவை, உணர்ச்சி பூர்வமான காட்சிகள் ஆகியவற்றின் மூலம் ரசிகர்களிடையே தனித்துவமான இடத்தைப் பெற்றார்.
அவரது மறைவுக்கு அரசு சார்பாக மரியாதை வழங்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். இதன்படி, காவல்துறை மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்படும். திரையுலகில் அவர் செய்த பங்களிப்பை அரசு அங்கீகரிப்பதாக இந்த அரசு மரியாதை கருதப்படுகிறது.
இதையும் படிங்க இப்படி ஒரு செய்தி வரும் என கனவிலும் நினைக்கவில்லை.. பாக்யராஜ் மறைவு குறித்து ஊர்வசி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com