History of Tiruchendur Shiva Temple | திருச்செந்தூர் சிவன் கோவிலுக்கு பின்னால் ஓர் அதிசயம் புதைந்துள்ளது. இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டது ஆகும்.
History of Tiruchendur Shiva Temple | திருச்செந்தூர் சிவன் கோவிலுக்கு பின்னால் ஓர் அதிசயம் புதைந்துள்ளது. இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டது ஆகும்.
Published on: September 21, 2024 at 9:45 pm
History of Tiruchendur Shiva Temple | பல நூறு வருடங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூரில் சிவக்கொழுந்து செட்டியார் என்ற வியாபாரி வாழ்ந்து வந்துள்ளார். இவர் ஓர் உளுந்து வியாபாரி. சிவபெருமானின் மிகப்பெரிய பக்தனான இவர் நாள்தோறும் சிவபெருமானை பூஜித்து வந்துள்ளார். வழக்கம்போல் உளுந்து வியாபாரம் செய்யும் அவர் ஒரு நாள் தான் வெளியூருக்கு சென்று வருவதாகவும் தான் திரும்பி வரும் வரை இந்த உளுந்து மூட்டைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அருகிலுள்ள மக்களிடம் சொல்லிவிட்டு சென்றார்.
வெளியூர் சென்றவர் மீண்டும் ஊருக்கு வரவில்லை. அவர் திரும்பி வராததால் ஊர்மக்கள் உளுந்து மூட்டை கெட்டு விடும் எனவே அதனை பணமாக மாற்றி அவர் ஊர் திரும்பியதும் பணத்தை அவரிடம் கொடுத்து விடலாம் என்று எண்ணி மூடையை திறந்து பார்த்தனர். உள்ளே இருந்ததை பார்த்ததும் சுற்றி இருந்தவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
ஏனெனில் உளுந்துக்கு பதிலாக உள்ளே தங்கக் காசுகளும் வைரங்களும் வைடூரியங்களும் இருந்தன. நீண்ட நாள்களாக செட்டியார் ஊர் திரும்பாததால் அதிலிருந்த தங்க காசுகளை வைத்து ஊர் மக்கள் சிவபெருமானுக்கு கோவில் எழுப்பினர். அந்த கோவில் தான் தற்போது திருச்செந்தூரில் நாம் வழிபட்டு வருகின்ற சிவ கொழுந்தீஸ்வரர் ஆலயம் ஆகும்.
இதையும் படிங்க : மயானத்தில் கடும் தவம்; சுழட்டி அடித்த பேய்கள்: நேரில் காட்சிக் கொடுத்த முருகன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com