அம்மோனியா வாயுக் கசிவால் 7 உயிர்கள் பலி… திருவள்ளூரில் நடந்தது என்ன?

Tiruvallur Tragedy : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கடல் உணவு பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவு சம்பவத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Published on: June 21, 2026 at 7:44 pm

திருவள்ளூர், ஜூன் 21: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் கடல் உணவு ஏற்றுமதி மற்றும் பதப்படுத்தும் ஆலையில் ஞாயிற்றுக்கிழமை அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் மூச்சுத்திணறல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மயங்கி விழுந்தனர்.

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட 67 தொழிலாளர்களில் 46 பேர் வெல்ஸ் மருத்துவமனை மற்றும் 21 பேர் வெங்கடேஸ்வரா மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 9 பேரின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் மாற்றப்பட்டனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆலையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்ததோடு, காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், தொழிற்சாலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த, மாநிலம் முழுவதும் ஆய்வுகள் நடத்த உத்தரவிட்டுள்ளார். மூன்று உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா மதிமுக? ஆர்.எஸ் பாரதி சூசகமான பதில்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com