திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா மதிமுக? ஆர்.எஸ் பாரதி சூசகமான பதில்!

RS Bharathi : திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

Published on: June 21, 2026 at 2:23 pm

சென்னை ஜூன் 21, 2026; திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கூட்டணியில் இருந்து வெளியேறிய ஐயூஎம்எல் குறித்து கருத்து தெரிவித்தார். அமைச்சரவையில் இடம்பெற்று விட்டு, பின்னர் காரணம் காட்டி கூட்டணியிலிருந்து விலகியதாக அவர் குறிப்பிட்டார். இதே பாணியை மதிமுகவும் பின்பற்றக்கூடும் என அவர் தெரிவித்ததால், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அவர் கூறியதாவது, “மதிமுகவும் இதே வழியைத் தான் பின்பற்றும். ஏற்கனவே அமைச்சரவையில் இடம் பெற்றுவிட்ட நிலையில், பின்னர் காரணம் காட்டி கூட்டணியிலிருந்து விலகும் வாய்ப்பு உள்ளது” என தெரிவித்தார். இதனால், எதிர்காலத்தில் கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.

மேலும், ராகுல்காந்தி அழைப்பு விடுப்பார் என்றாலும், அதற்கான முடிவை எடுப்பது திமுகதான் என ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தினார். கூட்டணியில் திமுகவின் நிலைப்பாடு முக்கியமானதாக இருக்கும் என்றும், இறுதி முடிவுகள் திமுக தலைமையிலேயே எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கருத்துகள், தமிழக அரசியல் சூழலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளன. கூட்டணியில் உள்ள கட்சிகள் எவ்வாறு செயல்படப்போகின்றன, எதிர்காலத்தில் எந்த மாற்றங்கள் நிகழப்போகின்றன என்பதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க; நெல்லை, குமரி மக்களே.. மழை காரணமாக ஜில் ஜில் ஆகப்போகும் மாவட்டங்கள்.. முழு பட்டியல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com