நெல்லை, குமரி மக்களே.. மழை காரணமாக ஜில் ஜில் ஆகப்போகும் மாவட்டங்கள்.. முழு பட்டியல்!

RMC Chennai: திருநெல்வேலி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published on: June 21, 2026 at 11:30 am

சென்னை, ஜூன் 21, 2026 : தென் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் 22ஆம் தேதி திங்கள்கிழமை கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில் மழை காரணமாக மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மேகமூட்டம் அதிகரித்து, ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் கனமழை உருவாகும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் மழை தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை காரணமாக சாலைகளில் நீர் தேங்குதல், போக்குவரத்து பாதிப்பு, மின்சாரம் தடை போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம், விவசாயிகள் மழை காரணமாக பயிர்கள் பாதிக்கப்படாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க தூத்துக்குடி: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து… பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய் Perambur MLA Office

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய்

சொத்துக் குவிப்பு வழக்கு.. நேரில் ஆஜராவதில் இருந்து எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்துக்கு விலக்கு! MRK Panneerselvam

சொத்துக் குவிப்பு வழக்கு.. நேரில் ஆஜராவதில் இருந்து எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்துக்கு விலக்கு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com