₹75,000 பயிர் கடன்கள் முழுமையான தள்ளுபடி.. முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

₹75,000 Farm Loan Waiver : தமிழக முதல்வர் விஜய், ரூ.75 ஆயிரம் வரை உள்ள விவசாயக் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

Published on: June 16, 2026 at 4:04 pm

சென்னை, ஜுன் 16 2026: கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார்.
ஆனால், இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள ரூ.75 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், ரூ.75 ஆயிரத்துக்கு மேல் பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு தலா ரூ.35 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

கடந்த 15-ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் வேளாண்மை, கூட்டுறவு, நிதி மற்றும் திட்டம்-வளர்ச்சித் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு மறுஆய்வு செய்யப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் மாநிலத்தின் தற்போதைய நிதிநிலையை கருத்தில் கொண்டு, 2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 14 லட்சத்து 43 ஆயிரத்து 504 விவசாயிகளுக்கு சுமார் ரூ.6,000 கோடி மதிப்பில் கடன் தள்ளுபடி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் கடந்த நிதியாண்டில் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரமும், குறைந்தபட்சமாக ரூ.35 ஆயிரமும் பயன் கிடைக்கும். மேலும், இது வரும் சாகுபடி பருவத்தில் புதிய கடன் பெற விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் தொடர் குற்ற செயல்கள்.. வடமாநில இளைஞர்களை கணக்கெடுங்க.. அண்ணாமலை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com