Selva Perunthagai : மகளுக்கு திருமணம் வைத்துள்ளேன்; அதுவரை காங்கிரஸ் மாநில தலைவராக தொடர அனுமதியுங்கள் என பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Selva Perunthagai : மகளுக்கு திருமணம் வைத்துள்ளேன்; அதுவரை காங்கிரஸ் மாநில தலைவராக தொடர அனுமதியுங்கள் என பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published on: June 14, 2026 at 3:59 pm
சென்னை, ஜூன் 14, 2026: அண்டை மாநில கதர் பார்ட்டிக்கு புதிய தலைவரை நியமித்தபோது, தமிழகத்தில் தலைமை மாற்றம் குறித்தும் பேச்சு எழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், தற்போதைய ‘செல்வ’ தலைவர், டெல்லியில் தன்னை ஆதரிக்கும் தலைவரிடம் முன்கூட்டியே பேசியதாக கூறப்படுகிறது.
அவர், “இத்தனை நாள் பதவியில் இருந்துவிட்டேன். எனது மகளுக்கு 18-ம் தேதி திருமணம் வைத்திருக்கிறேன். அந்த சுபநிகழ்ச்சியை நல்லபடியாக நடத்தி முடிக்கிறேன். அதுவரை என்னை தலைவர் பதவியில் தொடர அனுமதியுங்கள்” என்று கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், தமிழகத்தில் தலைவர் மாற்றம் குறித்த பேச்சுவார்த்தை தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தலைவரின் குடும்ப நிகழ்ச்சியை முன்னிட்டு, கட்சித் தலைமையகம் மாற்றத்தை நிறுத்தியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தச் சூழல், தமிழக அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. தலைமை மாற்றம் எப்போது நடைபெறும், யார் புதிய பொறுப்பை ஏற்கப் போகிறார்கள் என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
இதையும் படிங்க : இன்னும் 15 வருஷம்தான்.. இந்தியாவை வழி நடத்துவார் விஜய்.. விஜயதரணி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com