கேரள லாட்டரி குலுக்கல்.. முதல் பரிசு ரூ.1 கோடி.. யாருக்கு அதிர்ஷ்டம்?

Kerala lottery result today: கேரள லாட்டரி இன்றைய குலுக்கல் முடிவுகள் மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின்றன.

Published on: June 14, 2026 at 11:26 am

திருவனந்தபுரம், ஜூன் 14, 2026: கேரள மாநில லாட்டரித் துறையின் சம்ரித்தி SM 58 லாட்டரி முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்பட்டன. இந்த லாட்டரியின் முதல் பரிசு ரூ.1 கோடி, இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் தலா ஒருவருக்கே வழங்கப்படுகின்றன.

மேலும், 12 பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள நான்காம் பரிசு வழங்கப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு நிலைகளில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

லாட்டரி பரிசுத் தொகை ரூ.5000-க்கும் குறைவாக இருந்தால், கேரளாவில் உள்ள எந்தவொரு லாட்டரி கடையிலிருந்தும் அத்தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். ரூ.5000-க்கும் அதிகமாக இருந்தால், வெற்றியாளர்கள் தங்களது டிக்கெட் மற்றும் அடையாள அத்தாட்சியை அரசு லாட்டரி அலுவலகத்திலோ அல்லது வங்கியிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

வெற்றியாளர்கள் அரசு கெஜட்டில் வெளியிடப்பட்ட முடிவுகளைச் சரிபார்த்து, பரிசு பெற்ற லாட்டரி டிக்கெட்டை 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் பரிசுத் தொகையைப் பெறுவதற்கான நடைமுறை நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை.. மே மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் பங்குகள் 40% சரிவு ஏன்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com