NEET Re Exam: நீட் மறுதேர்வில் மாணவர்களுக்கு கூடுதல் 15 நிமிடங்கள் ஒதுக்க தேசிய தேர்வு முகமை (என்டிஏ) முடிவு செய்துள்ளது.
NEET Re Exam: நீட் மறுதேர்வில் மாணவர்களுக்கு கூடுதல் 15 நிமிடங்கள் ஒதுக்க தேசிய தேர்வு முகமை (என்டிஏ) முடிவு செய்துள்ளது.

Published on: June 12, 2026 at 2:07 pm
புதுடெல்லி, ஜுன் 12 2026: நீட் -யுஜி 2026 மறுதேர்வு ஜூன் 21, 2026 அன்று நடைபெற உள்ளது. தேர்வில் மாணவர்களுக்கு கூடுதல் 15 நிமிடங்கள் வழங்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
தேர்வு முறையை மாணவர்களுக்கு ஏற்றவாறு எளிதாக்கும்நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றத்தின் மூலம், வழக்கமாக 3 மணி நேரம் நடைபெறும் தேர்வு தற்போது 3 மணி நேரம் 15 நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேர்வு நேரம் 180 நிமிடங்களிலிருந்து 195 நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் மறுதேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறும். இந்த கூடுதல் 15 நிமிடங்கள் தேர்வுக்கான ஆவண சரிபார்ப்பு, நிர்வாக நடைமுறைகள் மற்றும் பதில்களை சரிபார்க்கும் பணிகளுக்காக மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என என்டிஏ அறிவித்துள்ளது.
மேலும், மாணவர்கள் கணக்கீடுகள் மற்றும் குறிப்புகளை எழுதுவதற்கு வசதியாக வினாத்தாள் புத்தகத்தில் கூடுதல் இடமும் வழங்கப்பட உள்ளது. தேர்வு நாளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தை குறைத்து, தேர்வை சீராக எழுதுவதற்கான சூழலை உருவாக்குவதே இந்த மாற்றங்களின் முக்கிய நோக்கமாகும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
http://www.nta.ac.in/Download/Notice/Notice_20260612114428.pdf
மே 3, 2026 அன்று நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு ஜூன் 21, 2026 அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையில் மாணவர்கள் நலன் கருதி தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வை எழுதவுள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இந்த கூடுதல் நேர ஒதுக்கீடு முக்கிய நிவாரணமாக கருதப்படுகிறது. கூடுதல் நேரம் மற்றும் வசதிகள், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் என்றும் எதிர்பாரக்கப்படுகிறது.
இதையும் படிங்க தமிழ்நாட்டில் 3 லட்சம் என்ஜினீயரிங் விண்ணப்பங்கள்.. தரவரிசை வெளியீடு எப்போது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com