தென் ஆப்பிரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு.. 12 பேர் பலி.. பரபரப்பு தகவல்கள்!

Johannesburg shooting: தென் ஆப்பிரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Published on: June 10, 2026 at 1:53 pm

ஜோகன்னஸ்பர்க், ஜூன் 10, 2026: தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள கிளீவ்லேண்ட் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்பர்ஸ் எனப்படும் முறைசாரா குடியிருப்புப் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் ஒன்பது பேர் காயமடைந்ததாக காவல்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது. சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், 10க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களைத் தேடும் வேட்டையைத் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ராய்ட்டர்ஸ் வெளியிட்ட தகவலின்படி, சந்தேக நபர்கள் வெள்ளை நிற டொயோட்டா குவாண்டம் வாகனத்தில் வந்து, இரண்டு நுழைவாயில்கள் வழியாக குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து, பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அதே வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.

ஸ்கை நியூஸ் தகவலின்படி, சம்பவ இடத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பலரை அதிகாரிகள் கண்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அங்கு எட்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், மற்றொரு ஆண் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.

தென்னாப்பிரிக்காவில் உள்ள முறைசாரா குடியிருப்புகள் பெரும்பாலும் குடிசைகள் அல்லது திட்டமிடப்படாத கட்டமைப்புகளைக் கொண்ட பகுதிகளாகும். இத்தகைய இடங்களில் குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறுவதால், காவல்துறை விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தாக்குதலுக்கான நோக்கம் குறித்து இன்னும் தெளிவான தகவல் வெளியாகவில்லை.

இதையும் படிங்க : கென்யா: பள்ளி மாணவிகள் விடுதியில் தீ விபத்து..16 பேர் பலி

பிரான்ஸ் நாட்டில் பிரம்மாண்ட இந்து கோவில்! இந்தியா–பிரான்ஸ் உறவுக்கு புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி
India-France Ties

பிரான்ஸ் நாட்டில் பிரம்மாண்ட இந்து கோவில்! இந்தியா–பிரான்ஸ் உறவுக்கு புதிய அத்தியாயம்: பிரதமர்

நேபாள கோர வெள்ளம், நிலச்சரிவு: 600-க்கும் மேற்பட்டோர் சுரங்கங்களில் சிக்கி தவிப்பு! மீட்புப் பணிகள் தீவிரம்
Nepal Floods

நேபாள கோர வெள்ளம், நிலச்சரிவு: 600-க்கும் மேற்பட்டோர் சுரங்கங்களில் சிக்கி தவிப்பு! மீட்புப்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com