செக் வைத்த பிரக்ஞானந்தா..புன்னகைத்த முதல்வர்!

CM Vijay: நார்வே செஸ் 2026 பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் ₹50 லட்சம் காசோலையை வழங்கி கௌரவித்தார்.

Published on: June 8, 2026 at 4:39 pm

சென்னை, ஜுன் 8 2026: தமிழகத்தைச் சேர்ந்த 20 வயது செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, நார்வே செஸ் 2026 போட்டியை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதையடுத்து, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவரை நேரில் சந்தித்து பாராட்டினார்.

மேலும், கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ₹50 லட்சம் காசோலை வழங்கி கௌரவித்தார். விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் வழங்கப்பட்ட இந்த பரிசு, தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்த சாதனையை பாராட்டும் வகையில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எஸ்.டி.ஏ.டி. உறுப்பினர் செயலாளர் ஜே. மேகநாத ரெட்டி மற்றும் பிரக்ஞானந்தாவின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.

விழாவின்போது முதலமைச்சர் விஜயும் பிரக்ஞானந்தாவும் செஸ் விளையாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

நன்றி ஏஎன்ஐ

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா, “செஸ் பலகையை கொண்டு வரும்படி கூறியதால் கொண்டு வந்தேன். ஆனால், முதலமைச்சர் உண்மையாகவே என்னுடன் செஸ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கவில்லை. சுமார் 15 நிமிடங்கள் விளையாடினோம். அந்த ஆட்டத்தில் நான் வெற்றி பெற்றேன். அவர் மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் நடந்துகொண்டார்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, நார்வே செஸ் பட்டத்தை வென்றதற்காக விஜய் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து, தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த சாதனை என பாராட்டியிருந்தார்.

நார்வே நாட்டின் ஒஸ்லோவில் ஜூன் 5-ஆம் தேதி நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரின் 14-வது பதிப்பில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிச் சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மர்-ஐ கிளாசிக்கல் ஆட்டத்தில் வீழ்த்தி மொத்தம் 18 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்று சாதனை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மீண்டும் சேர வாய்ப்பில்லை.. காங்கிரஸை விவாகரத்து செய்து விட்டோம்.. ஆர்.எஸ் பாரதி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com