DMK Congress split : தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மீண்டும் அமைய வாய்ப்பு இல்லை; காங்கிரஸை விவாகரத்து செய்து விட்டோம் என தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார்.
DMK Congress split : தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மீண்டும் அமைய வாய்ப்பு இல்லை; காங்கிரஸை விவாகரத்து செய்து விட்டோம் என தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார்.

Published on: June 8, 2026 at 2:48 pm
சென்னை, ஜூன் 8, 2029: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தவெக பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக விமர்சித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்ஆகியோரை விமர்சிக்கும் அளவிற்கு ஆதவ் அர்ஜுனாவுக்கு அரசியல் தகுதி இல்லை.
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஒரு மேயர் பதவியாவது வென்றால் தன்னுடைய மீசையின் ஒரு பக்கத்தை மழித்துக் கொள்வதாக சவால் விடுத்தார். மேலும், டிவிகே தலைவர் விஜய்க்கு அரசியல் அபாயம் ஏற்பட்டால் அதற்குக் காரணம் ஆதவ் அர்ஜுனா தான் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
திமுகவை விட்டு சென்ற கட்சிகளுடன் மீண்டும் இணைய வாய்ப்பு இல்லை. எங்களுக்கு துரோகம் செய்து விட்டு சென்றவர்களை மீண்டும் ஒருபோதும் ஏற்கமாட்டோம். அவர்களுடன் அரசியல் தொடர்போ, உறவோ இருக்காது. திமுக தொண்டர்களும் ஏற்கமாட்டார்கள் என்றார்.
திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் கூறிய கருத்தை மறுத்த அவர், திமுக காங்கிரஸை ஏற்கனவே விவாகரத்து செய்துவிட்டது. சில கட்சிகள் எங்களிடம் ஆலோசித்துவிட்டு பிரிந்தன. அது ஒரு வகையான விவாகரத்து. ஆனால் காங்கிரஸுடனான விவாகரத்து வேறு மாதிரியானது என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.
இதையும் படிங்க: 3 நாள் டைம், பகிரங்க மன்னிப்பு.. த.வெ.க பெண் எம்.எல்.ஏ.வுக்கு தி.மு.க. நோட்டீஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com