சிங்கப்பெண் திட்டம் ஜூன் 9 முதல் அமல்.. முதல் அமைச்சர் விஜய்

Singappen rapid response force : சிங்கப் பெண் திட்டம் ஜூன் 9ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என முதல் அமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

Published on: June 8, 2026 at 2:40 pm

சென்னை, ஜுன் 8 2026: பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைவாக கையாளும் சிறப்பு அதிரடிப் படையாக அறிவிக்கப்பட்ட “சிங்கப்பெண்” விரைவு நடவடிக்கை படை நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்தப் படையை தொடங்கி வைக்கிறார்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே இந்த சிறப்புப் படை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதலில் மே 28-ஆம் தேதி சிங்கப்பெண் படையை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் மாநில காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மாற்றம் காரணமாக அந்த நிகழ்ச்சி திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ஜுன் 9ஆம் தேதி தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 10ஆம் தேதி பதவியேற்றபோது, பெண்கள் மீதான குற்றங்களை தடுக்கும் வகையில் தனிப்பட்ட படை அமைப்பதாக முதல்வர் அறிவித்தார். அதன் பின்னர் அரசு உத்தரவு பிறப்பித்து, “சிங்கப்பெண்” படை முதல்வரின் நேரடி மேற்பார்வையில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், ஐ.ஜி. பதவியில் உள்ள மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி கே. பவனீஸ்வரி இந்த படையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த படையில் ஒரு எஸ்.பி., இரண்டு டி.எஸ்.பி., நான்கு இன்ஸ்பெக்டர்கள், எட்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சுமார் 20 போலீசார் இணைக்கப்பட உள்ளனர். பெண்கள் போலீசாருக்கும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் தனிப்பட்ட யூனிஃபார்ம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த யூனிஃபார்ம் “சிங்கப்பெண்” படை உறுப்பினர்களுக்கே மட்டும் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகளை மூத்த போலீஸ் அதிகாரிகள் தற்போது மேற்பார்வை செய்து வருகின்றனர்.

மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து கவலை வெளியிட்ட எதிர்க்கட்சிகள், படையை செயல்படுத்துவதில் ஏன் தாமதம் என கேள்வி எழுப்பியிருந்தன. இந்நிலையில் நடைபெற உள்ள தொடக்க விழாவில், “சிங்கப்பெண்” படையின் செயல்பாட்டு அமைப்பு மற்றும் மாநிலம் முழுவதும் அதன் பணியமர்த்தல் திட்டம் குறித்து அரசு விரிவான விளக்கத்தை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை.. சென்னையில் ஐவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com