Share Market Today: வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கள்கிழமை (ஜூன் 8, 2026) இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
Share Market Today: வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கள்கிழமை (ஜூன் 8, 2026) இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

Published on: June 8, 2026 at 12:53 pm
மும்பை, ஜூன் 8, 2026: இந்தியா-இஸ்ரேல்-ஈரான் தொடர்பான மேற்கு ஆசிய பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஆசிய பங்குச்சந்தைகளில் திங்கட்கிழமை கடும் சரிவு காணப்பட்டது. ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து உலக முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம் அதிகரித்தது.
இதன் தாக்கமாக ஜப்பானின் நிக்கேய் உள்ளிட்ட முக்கிய ஆசிய சந்தைகள் வீழ்ச்சியடைந்தன. எனினும், வாரத்தின் தொடக்கத்தில் கிஃப்ட் நிஃப்டி (GIFT Nifty) 50 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டதால், இந்திய சந்தைக்கு ஆரம்பத்தில் சாதகமான அறிகுறி கிடைத்தது.
கடந்த வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 50 குறியீடு 50 புள்ளிகள் அல்லது 0.21 சதவீதம் சரிந்து 23,367 புள்ளிகளில் முடிவடைந்தது. அதேபோல் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 117 புள்ளிகள் அல்லது 0.16 சதவீதம் குறைந்து 74,243 புள்ளிகளில் நிறைவடைந்தது
கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்ததாலும், உலகளாவிய சந்தைகளில் ஏற்பட்ட விற்பனை அழுத்தத்தாலும் இந்திய பங்குச் சந்தை திங்கள்கிழமை கடுமையாக வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் சுமார் 1 சதவீதம் வரை சரிவடைந்தன.
தொடக்கத்தில் BSE சென்செக்ஸ் 817 புள்ளிகள் சரிந்து 73,426-க்கு, NSE நிப்டி 257 புள்ளிகள் குறைந்து 23,109-க்கு திறந்தது. பின்னர், இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 522.98 புள்ளிகள் (0.70%) வீழ்ச்சி, நிப்டி 169.60 புள்ளிகள் (0.73%) குறைந்து காணப்பட்டது. விப்ரோ, டிசிஎஸ், மஹிந்திரா & மஹிந்திரா, ஹிந்தால்கோ, பஜாஜ் ஃபைனான்ஸ் முக்கியமாக இழப்பை சந்தித்துள்ளன.
இதையும் படிங்க : 34 சதவீதம் வரை வளர்ச்சி.. ஏரோநாட்டிக்ஸ் டூ பாரத் டைனமிக்ஸ் வரை.. முதலீட்டுக்கு எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com