நியூயார்க், ஜூன் 3, 2026: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடந்த கடுமையான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, ஈரான் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா காமனெய்யை சந்திக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்து, அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுப் போர் மற்றும் ஈரான் இடையேயான பதற்றமான சூழலில் வெளிப்பட்டுள்ளது.
அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுப் படைகள் பிப்ரவரி 28 அன்று ஈரானை தாக்கியதில், அப்போதைய உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெய் உயிரிழந்தார்.
பின்னர், அவரது மகன் 56 வயதான ஆயத்துல்லா மொஜ்தபா காமனெய் ஈரானின் புதிய உச்சத் தலைவராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், டிரம்ப், மொஜ்தபா காமனெய் தாக்குதல்களில் கடுமையாக காயமடைந்திருக்கலாம் எனக் கூறியுள்ளார். இது குறித்து ட்ரம்ப், “அவரின் உடல்நிலை சிறப்பாக இல்லை, பல்வேறு உறுப்புகளை இழந்திருக்கிறார்” என்றார்.
ட்ரம்ப் பேச்சு
இது தொடர்பாக, நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட “Pod Force One” பாட்காஸ்டில் பேசிய டிரம்ப், “நாம் ஒருநாள் சந்திப்போம், சூழ்நிலைகள் எப்படி மாறுகின்றன என்பதைப் பொறுத்தது” எனக் கூறினார். அவர், ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தைகளில் இறுதி முடிவுகளை மொஜ்தபா காமனெய் எடுத்து வருகிறார் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
இதே நேரத்தில், டிரம்ப்–நெதன்யாகு தொலைபேசி உரையாடல் மிகவும் கடுமையாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரம்ப், “நீ பைத்தியமா? நான் உன்னை சிறையில் போகாமல் காப்பாற்றினேன்” எனக் கோபமாகக் கூறியதாக சில அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், லெபனானுடன் இஸ்ரேல் தொடர்ந்து மோதுவது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தார்.
இஸ்ரேல், ஹெஸ்பொல்லா மீது தெற்கு லெபனானில் தாக்குதலை அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் செய்து ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும், அணு திட்டத்தை கட்டுப்படுத்தவும் முயற்சி செய்து வருகிறது. இந்த தொலைபேசி உரையாடல், அமெரிக்கா–இஸ்ரேல் உறவுகள் எவ்வளவு பதற்றமாக உள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
TVK Functionary Murdered : ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்த அவர், அதிமுகவில் 174-வது தெற்கு வட்டக் கழகச் செயலாளராக இருந்த நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு…
Siddaramaiah 75% reservation proposal: பெங்களூருவில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் பேசிய அவர், “இது வெறும் அரசியல் கோரிக்கை அல்ல; சமூக சமநிலையை நிலைநிறுத்தும் அவசியமான…
Minister Keerthana : கடந்த கால அரசுகள் போல் அல்லாமல் வெளிப்படையான அரசாங்கத்தை நடத்தி வருகிறோம் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்….
Vanni Arasu : சனாதன எதிர்ப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவனம் செலுத்தி வருகிறது என சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார் அமைச்சர் வன்னி அரசு….
VBJ Bangle Fest: 10,000-க்கும் மேற்பட்ட வளையல் வடிவமைப்புகளுடன் ‘தி பேங்கிள் பியூட்டீஸ்’ விழாவை VBJ அறிமுகப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 5 வரை நடைபெறும்…
Sengottaiyan: பிரதமர் வேட்பாளராக முதலமைச்சர் விஜய் தவெகவினரால் முன் நிறுத்தப்படுகிறாரா என்ற கேள்விக்கு, செங்கோட்டையன் பதிலளித்தார்….