மக்களுக்காக சேவை செய்ய வந்தவர் விஜய்.. ராம் சரண் புகழாரம்!

Charan praises CM Vijay : கேரியரின் உச்ச புகழை விடுத்து மக்களுக்காக சேவை செய்ய வந்தவர் விஜய் என நடிகர் ராம் சரண் புகழாரம் சூட்டியுள்ளார்.

Published on: May 31, 2026 at 1:45 pm

சென்னை, மே 31, 2026: ராம் சரண் தனது புதிய படமான ‘பெத்தி’ படத்தின் பிரசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, அவர் மேடையில், “தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் உச்சக்கட்ட புகழையும் நட்சத்திர அந்தஸ்தையும் விட்டு மக்களுக்காக சேவை செய்ய வந்தார். நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறினார். மேலும், தமிழ்நாடு மக்களுக்கும் விஜயுக்கும் வாழ்த்துகள் தெரிவித்தார். 2025 டிசம்பர் மாதம் விஜய் நடிப்பை விட்டு அரசியலில் முழுமையாக ஈடுபடுவதாக அறிவித்தார். 2026 மே 10 அன்று தமிழ்நாடு முதல்வராக பதவியேற்றார்.

அவரது கட்சி தமிழக வெற்றி கழகம் (டி.வி.கே), முதல் தேர்தலிலேயே 108 இடங்களை வென்று, பின்னர் 120 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பெற்றது. இதனால் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய பாரம்பரிய கட்சிகளை வீழ்த்திய அரசியல் அதிர்ச்சி ஏற்பட்டது.

ஜனநாயகன்

விஜயின் கடைசி படம் ‘ஜனநாயகன்’ என அறிவிக்கப்பட்டது. இந்தப் படம் ஜனவரி 9 வெளியீடு திட்டமிடப்பட்டிருந்தாலும், சி.பி.எஃப்.சி சான்றிதழ் சிக்கல் காரணமாக தாமதமானது. இந்நிலையில், ஏப்ரல் மாதம் படம் ஆன்லைனில் கசிந்ததால், ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில், தற்போது ஜூன் 19 வெளியீடு என தகவல் வெளியாகியுள்ளதாலும், அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை.

பெத்தி படம் பற்றி…

புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள பெத்தி படத்தில் ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜகபதி பாபு, போமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் ஜூன் 4ஆம் தேதி 2026 வியாழக்கிழமை தியேட்டர்களில் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜனநாயகன் எப்போது வரும்? வெளிப்படையாக பேசிய டைரக்டர் ஹெச். வினோத்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com