தொடர்ந்து 2-வது நாளாக ஏறிய தங்கம்… சவரன் விலை என்ன தெரியுமா?

Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்வை பதிவு செய்துள்ளது.

Published on: May 30, 2026 at 12:14 pm

சென்னை, மே 30 2026: சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது. கடந்த மே 26-ந்தேதி முதல் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கம் விலை, நேற்று முதல் மீண்டும் உயரத் தொடங்கியது. ர்.

நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்தது. இதன் காரணமாக ஒரு கிராம் தங்கம் ரூ.14,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.800 அதிகரித்து ரூ.1,16,800-க்கு விற்பனையானது.

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.30 அதிகரித்து ரூ.14,630-க்கும், அதேபோல், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 240 உயர்ந்து ரூ.1,17,040-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

24 கேரட் தூய தங்கத்தைப் பொறுத்தவரை ஒரு கிராம் ரூ. 15 ஆயிரத்து 960க்கும் ஒரு சவரன் ரூ. 1 லட்சத்து 27 ஆயிரத்து 680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு, அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம் மற்றும் முதலீட்டாளர்களின் தேவை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்க விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க நாட்டில் பல பகுதிகளில் பெட்ரோல் தட்டுப்பாடு? இந்துஸ்தான் பெட்ரோலியம் மறுப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com