Kara OTT fans : கர திரைப்படத்தை தியேட்டரில் தவறவிட்டதற்காக ரசிகர்கள் தனுஷிடம் மன்னிப்பு கோரியுள்ளனர்.
Kara OTT fans : கர திரைப்படத்தை தியேட்டரில் தவறவிட்டதற்காக ரசிகர்கள் தனுஷிடம் மன்னிப்பு கோரியுள்ளனர்.

Published on: May 29, 2026 at 7:56 pm
சென்னை, மே 29, 2026: விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர’ திரைப்படம் ஓ.டி.டி-யில் வெளியாகிய பின் ரசிகர்கள் புதிய பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்நிலையில், திரையரங்கில் வெளியான போது எதிர்மறை விமர்சனங்கள் காரணமாக தவறவிட்டதாக சில ரசிகர்கள் ஒப்புக்கொண்டு, படக்குழுவிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
தனுஷின் ‘கர’ படம் ஏப்ரல் 30, 2026 அன்று திரையரங்கில் வெளியானது. இத்திரைப்படம், மே 28, 2026 அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் ஓ.டி.டி.யில் வெளியானது. இந்தப் படம், ஓ.டி.டி. தளத்தில் வெளியான பின், பலர் சமூக ஊடகங்களில் நல்ல விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.
அதில் சில ரசிகர்கள், “Sorry Mr D & Vignesh Raja…” என்று நேரடியாக படக்குழுவிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். மேலும் சிலர் “எதிர்மறை விமர்சனங்களை நம்பி படம் பார்க்கவில்லை. ஆனால் ஓ.டி.டி.-யில் பார்த்தபின், இது ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்று” என்று பாராட்டியுள்ளனர்.
முன்னதாக, ‘கர’ படம் ₹100 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திரையரங்கில் ₹50 கோடி மட்டுமே வசூல் செய்து முடிவடைந்தது. இதற்கிடையில் கர படத்துக்கு ஓ.டி.டி.-யில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், படம் மீண்டும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கர படத்தில், தனுஷ், மமிதா பைஜு, கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், சுராஜ் வெஞ்சாரமூடு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க : சூர்யாவை கைவிடாத கருப்பு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com