Instagram new update: இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பில் புது அப்டேட் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
Instagram new update: இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பில் புது அப்டேட் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Published on: May 28, 2026 at 6:59 pm
Updated on: May 28, 2026 at 8:53 pm
சென்னை, மே 28 2026: உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் முக்கியமான ஒன்றாக இன்ஸ்டாகிராம் உள்ளது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலி, முதலில் புகைப்படம் மற்றும் வீடியோ பகிர்வதற்கான தளமாக தொடங்கப்பட்டது. தற்போது ரீல்ஸ், ஸ்டோரிகள் உள்ளிட்ட பல அம்சங்களால் இளைஞர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 45 கோடி பேர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகின்றனர்.
புது அப்டேட்
பயனர்களை தொடர்ந்து கவர்வதற்காக இன்ஸ்டாகிராம் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ‘எடிட் ஸ்டோரி’ (Edit Story) என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தும் பணியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த வசதியின் மூலம், இன்ஸ்டாவில் பதிவிட்ட பிறகும் ஸ்டோரிகளை நேரடியாக திருத்திக்கொள்ள முடியும்.
தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் எழுத்துப் பிழை, தவறான டேக் அல்லது தேவையற்ற ஸ்டிக்கர் இருந்தால், அந்த ஸ்டோரியை நீக்கி மீண்டும் பதிவேற்ற வேண்டியம். ஆனால் புதிய அப்டேட் வந்த பிறகு, பதிவிட்ட ஸ்டோரியையே மீண்டும் திறந்து திருத்தம் செய்யும் வசதி கிடைக்கும். இதனால் பயனர்களுக்கு அதிக வசதி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய அம்சம் தற்போது சில ஐபோன் பயனர்களிடம் சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் அப்டேட்
அதேபோல், வாட்ஸ்அப்பிலும் ‘நெருங்கிய நண்பர்கள்’ (Close Friends) போன்ற தனியுரிமை அம்சம் அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குடும்பம், நண்பர்கள், அலுவலகம் என தனித்தனி பட்டியலை உருவாக்கி குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் ஸ்டேட்டஸை பகிரும் வகையில் விரைவில் அப்டேட் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க : ஆதார் முகவரி திருத்தம்.. மின்சார பில் போதும்.. புதிய விதிகள் சொல்வது என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com