விமான சேவை ரத்து.. ஏர் இந்தியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Flight suspension to Israel : ஏர் இந்தியா நிறுவனம் இஸ்ரேலுக்கான தனது விமான சேவைகள் இடைநிறுத்தத்தை ஜூலை 31 வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

Published on: May 28, 2026 at 6:10 pm

புதுடெல்லி, மே 28 2026: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக மேற்காசியாவில் கடந்த சில மாதங்களாக நிலைமை மோசமடைந்துள்ளது. வான்வழி தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக பல சர்வதேச விமான நிறுவனங்கள் தங்களின் சேவைகளை குறைத்துள்ளன. இதன் தாக்கம் இந்திய விமான போக்குவரத்துத் துறையிலும் எதிரொலித்துள்ளது.

ஏர் இந்தியா விமானசேவை

இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் இஸ்ரேலுக்கான தனது விமான சேவைகள் இடைநிறுத்தத்தை ஜூலை 31 வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

முன்னதாக ஏப்ரல் மாதம் வரை சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், போர் பதற்றம் நீடிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் செலவு

மேற்காசிய வான்வழிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் விமானங்கள் நீண்ட தூர வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

இதனால் எரிபொருள் செலவு அதிகரித்து, பல சர்வதேச சேவைகள் லாபமின்றி செயல்படுவதாக ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சில உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளும் தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேல், ஈரான் வான்வழிகள் தவிர்ப்பு

பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. சேவை ரத்து செய்யப்பட்ட விமானங்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு மாற்று விமான வசதி, தேதி மாற்றம் அல்லது முழு பணம் திருப்பி வழங்கப்படும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகின் பல்வேறு விமான நிறுவனங்களும் தற்போது இஸ்ரேல் மற்றும் ஈரான் வான்வழிகளை தவிர்த்து செயல்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க டெல்லியில் வெப்ப அலைக்கு வாய்ப்பு.. இந்திய வானிலை ஆய்வு மையம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com