Tirunelveli Hostel Scandal: திருநெல்வேலியில் பெண்கள் விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Tirunelveli Hostel Scandal: திருநெல்வேலியில் பெண்கள் விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Published on: May 26, 2026 at 1:25 pm
திருநெல்வேலி, மே 26, 2026: ஆண் நண்பரின் ஆசையை நிறைவேற்ற, விடுதியில் தங்கியிருந்த பெண்களை அவர்களுக்கே தெரியாமல் ஆபாசமாக படம் எடுத்து அனுப்பிய பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் எப்படி நடந்தது?
திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்த மகரஜோதி (39), கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியார் விடுதியில் தங்கி வந்தார். இவருக்கு கோயம்புத்தூரைச் சேர்ந்த இளைஞருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில், திருமணத்தை மீறிய உறவாக வளர்ந்துள்ளது. இந்நிலையில், அந்த இளைஞரின் கோரிக்கையை நிறைவேற்ற முயன்றார்.
அதன்படி, விடுதியில் தங்கியிருந்த பெண்களின் குளியலறை, துணி மாற்றும் அறை போன்ற இடங்களில் மறைந்து, அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளார்.
பெண்களுக்கு சந்தேகம்
இந்நிலையில், விடுதியில் தங்கியிருந்த பெண்கள், மகரஜோதியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்தனர்.
அதன்படி, அவரை மறைந்திருந்து கண்காணித்தபோது, அவர் பெண்களை ஆபாசமாக படம் எடுப்பதை கண்டனர். உடனே விடுதி காப்பாளரிடம் புகார் அளித்தனர்.
போலீசார் நடவடிக்கை
இந்நிலையில், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர், புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தனர். மகரஜோதி அதிரடியாக கைது செய்யப்பட்டார். தற்போது அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்பு தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஓசூரில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ரகசிய கேமிரா பொருத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த சம்பவத்தில் ஈடுபட்ட நீலு குமாரி குப்தா (23) என்ற பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : கஞ்சா வியாபாரத்தில் சின்ன சின்ன பெண்கள்? போலீஸ் விசாரணையில் பகீர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com