பெத்தி படத்தில் ராம் சரண் மிரட்டியிருக்கிறார்.. தேசிய விருது கன்ஃபார்ம்.. சிவராஜ் குமார்

Shiva Rajkumar : பெத்தி படத்தில் ராம் சரண் நடிப்புக்கு அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என நடிகர் சிவராஜ் குமார் கூறியுள்ளார்.

Published on: May 26, 2026 at 11:15 am

Updated on: May 26, 2026 at 11:18 am

பெங்களூரு, மே 26, 2026: கன்னட நடிகர் சிவராஜ்குமார், ராம் சரண் நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படத்தில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் உடல் மாற்றம் தேசிய விருது பெறும் அளவுக்கு சிறப்பாக உள்ளது என்று பாராட்டியுள்ளார். இந்த படம் ஜூன் 4, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பெங்களூருவில் நடந்த பெத்தி பட பத்திரிகையாளர் சந்திப்பில் சிவராஜ்குமார் கலந்து கொண்டார். அப்போது, ராம் சரண் தனது கதாபாத்திரத்தில் காட்டிய உடல் மாற்றம் மற்றும் அர்ப்பணிப்பு குறித்து பாராட்டினார். இது குறித்து பேசிய சிவராஜ் குமார், ““ராம் சரண் இந்த படத்திற்காக இரண்டு ஆண்டுகள் முழுமையாக உழைத்தார். அவரது நடிப்பு நேர்மையானது, தேசிய விருது பெறும் திறன் கொண்டது” என்றார்.

மேலும், பெத்தி படத்தில் சிவராஜ்குமார், ராம் சரணின் பயிற்சியாளர் அல்லது வழிகாட்டி போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக குறிப்பிட்டார். இந்நிலையில், சிவராஜ்குமார் மட்டுமல்லாமல், நடிகர் ரவி கிஷன் கூட ராம் சரணின் நடிப்பு பல விருதுகளை வெல்லும் என்று முன்கூட்டியே கூறியுள்ளார். புச்சி பாபு சானா இயக்கியுள்ள பெத்தி திரைப்படம் ஜூன் 4ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மம்முட்டி- மோகன்லால் சினிமா.. பேட்ரியாட் எந்த OTT தளத்தில் ரிலீஸ்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com