Patriot OTT Release Date : மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்த பேட்ரியாட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.
Patriot OTT Release Date : மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்த பேட்ரியாட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

Published on: May 25, 2026 at 7:49 pm
திருவனந்தபுரம், மே 25 2026: மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள பிரம்மாண்ட அரசியல்-ஸ்பை த்ரில்லர் திரைப்படம் பேட்ரியாட். இந்த திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் தற்போது டிஜிட்டல் வெளியீட்டின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் கடந்த மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம், 18 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்த படம் என்பதால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், ZEE5 நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிவிப்பின் படி, ‘Patriot’ திரைப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி முதல் ZEE5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. மலையாளத்துடன் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் மம்முட்டி, மோகன்லால் ஃபஹத் ஃபாசில், நயன்தாரா, குஞ்சாக்கோ போபன், ரேவதி, தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் ராஜீவ் மேனன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சுமார் ரூ.100 கோடிக்கும் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம், அரசியல், அதிகாரம், உளவு நடவடிக்கைகள் மற்றும் ரகசிய கண்காணிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
திரையரங்குகளில் படம் நல்ல ஓப்பனிங் பெற்றாலும், பின்னர் கலவையான விமர்சனங்கள் எழுந்தன. அதே நேரத்தில் மம்முட்டி, மோகன்லால், ஃபஹத் பாசில் ஆகியோரின் நடிப்பு மற்றும் தொழில்நுட்ப தரம் பாராட்டப்பட்டது.
இதையும் படிங்க : சினிமா டிக்கெட் விலையை உயர்த்துங்க.. விஜய் சேதுபதி கோரிக்கை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com