RS Bharathi on AIADMK MLAs: தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, தமிழ்நாட்டில் ஆயா ராம், காயா ராம் அரசியல் தொடங்கிவிட்டது எனத் தெரிவித்துள்ளார். இதன் பொருள் என்ன தெரியுமா?
RS Bharathi on AIADMK MLAs: தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, தமிழ்நாட்டில் ஆயா ராம், காயா ராம் அரசியல் தொடங்கிவிட்டது எனத் தெரிவித்துள்ளார். இதன் பொருள் என்ன தெரியுமா?

Published on: May 26, 2026 at 11:00 am
சென்னை, மே 26, 2026: தமிழ்நாட்டில், ஆயா ராம், காயா ராம் தொடங்கிவிட்டது என தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசியல் குழப்பம்
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வென்று ஆட்சிக்கு வந்தது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலை சந்தித்த காங்கிரஸ், இடதுசாரிகள் (இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உள்ளிட்டவை தங்களது ஆதரவை வழங்கியுள்ளன.
அ.தி.மு.க. உள்கட்சி பிரச்னை
#WATCH | Chennai, Tamil Nadu: On 3 AIADMK MLAs resigned from the party, DMK leader RS Bharathi says, "…They have already resigned. 'Aaya Ram, Gaya Ram' has started in Tamil Nadu." https://t.co/HSLoJ6knyh pic.twitter.com/VWOR6p9kQj
— ANI (@ANI) May 25, 2026
இதற்கிடையில் அ.தி.மு.க.வில் வெற்றிப் பெற்ற எம்.எல்.ஏ.க்களில் சிலர் எஸ்.பி வேலுமணி தலைமையில் செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில் அவர்களில் 3 பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இது தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பி.டி.ஐ, ஏ.என்.ஐ, ஐ.ஏ.என்.எஸ், என்டி.டிவி உள்ளிட்ட ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டியளித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, ‘தமிழ்நாட்டில் ஆயா ராம், காயா ராம் அரசியல் தொடங்கிவிட்டது” என்றார்.
ஆயா ராம், காயா ராம் அரசியல்
ஆயா ராம், காயா ராம் என்பது இந்திய அரசியலில் புகழ்பெற்ற வசனம் ஆகும். இதன் பொருள், “வருவார்கள், போவார்கள். இவர்களுக்கு எந்தக் கொள்கையும் கிடையாது. தொடர்ந்து தங்களது அரசியல் லாபம் மற்றும் அதிகாரத்துக்காக அரசியல் கட்சிகளை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்” என்பதாகும்.
இதையும் படிங்க : மேகதாது அணையை கட்ட விட மாட்டோம்.. அமைச்சர் சி.டி. நிர்மல் குமார்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com