UNICEF Ambassador: யுனிசெஃப் இந்தியாவின் பிரபல தூதராக ஸ்மிருதி மந்தனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
UNICEF Ambassador: யுனிசெஃப் இந்தியாவின் பிரபல தூதராக ஸ்மிருதி மந்தனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Published on: October 12, 2026 at 11:07 am
புதுடெல்லி, அக்.12, 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியமான யுனிசெஃப் இந்தியாவின் யூனிசெஃப் இந்தியா ஆதரவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்டோபர் 11-ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இளம் பெண்களுக்குச் சம உரிமைகள், சம வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதுடன், அவர்களின் உடல்நலம், நல்வாழ்வு மற்றும் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்துவதில் மந்தனா கவனம் செலுத்துவார்.
இந்தப் புதிய பொறுப்பின் மூலம், பெண் குழந்தைகள் விளையாட்டுகளில் பங்கேற்கவும், கல்வி கற்கவும், தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும் சம வாய்ப்புகளைப் பெறுவதற்கான விழிப்புணர்வுப் பணிகளில் ஸ்மிருதி மந்தனா ஈடுபடுவார். குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உரிமைகள் தொடர்பான முன்னெடுப்புகளில் ஏற்கெனவே அவர் பங்களித்துள்ளார். குறிப்பாக, பாலின சமத்துவம் மற்றும் வாழ்க்கைத் திறன்களை வலியுறுத்தும் யுனிசெஃப் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பிரசாரங்களுக்கும், யுனிசெஃப் அமைப்பின் ‘Promise to Children’ பிரசாரத்துக்கும் ஆதரவு அளித்துள்ளார்.
இந்த நியமனம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஸ்மிருதி மந்தனா, கிரிக்கெட் விளையாடிய தனது அனுபவம் ஒவ்வொரு கனவும் ஒரு வாய்ப்பிலிருந்தே தொடங்குகிறது என்பதைத் தனக்குக் கற்றுக்கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். கடின உழைப்பு, உறுதிப்பாடு மற்றும் ஊக்கம் ஆகியவை ஒரு வாய்ப்பைச் சிறப்பான சாதனையாக மாற்றும் என்றும், ஒவ்வொரு குழந்தையும் இளைஞரும் பெரிய கனவுகளைக் காணவும் தங்களது முழுத் திறனையும் அடையவும் வாய்ப்பு பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அர்ஜுனா விருது பெற்ற மந்தனா, இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவராகத் திகழ்வதுடன், இளம் பெண்களுக்கு முன்னுதாரணமாகவும் விளங்குகிறார்.
இதையும் படிங்க : இந்தியா- நியூசி 100 ஆண்டு உறவு.. புதிய கிரிக்கெட் ஜெர்சி.. புதிய தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com