சினிமா டிக்கெட் விலையை உயர்த்துங்க.. விஜய் சேதுபதி கோரிக்கை

Vijay Sethupathi urges ticket hike : சினிமா டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Published on: May 25, 2026 at 5:00 pm

சென்னை, மே 25, 2026: நடிகர் விஜய் சேதுபதி, திரையரங்குகளில் திரைப்பட டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர், சினிமா துறையின் நிலைத்தன்மைக்கும், தொழிலாளர்களின் நலனுக்கும் இது அவசியம் என வலியுறுத்தினார்.

விஜய் சேதுபதி சமீபத்தில் நடைபெற்ற பரிமலா & கோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியார்.
அப்போது, திரையரங்க டிக்கெட் விலை குறித்த பிரச்சினையை எடுத்துரைத்தார். தற்போதைய விலை, சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு போதுமான வருமானத்தை வழங்கவில்லை என அவர் கூறினார்.

டிக்கெட் விலை

மேலும், “சினிமா தயாரிப்பில் செலவுகள் அதிகரித்துள்ளன. தொழில்நுட்பம், கலைஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் சம்பளம் உயர்ந்துள்ளது. இதனால், தற்போதைய டிக்கெட் விலை போதுமானதாக இல்லை. விலை உயர்த்தினால், சினிமா துறையின் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி உறுதி செய்யப்படும்” என விஜய் சேதுபதி முதலமைச்சர் விஜயிடம் நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில், சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழிலாளர்கள் அனைவரும் டிக்கெட் விலை உயர்வு குறித்து எதிர்பார்த்து வருகின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்ட ஐஸ்வர்யா ராய்.. சிரித்து ரசித்த மகள் ஆராத்யா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com