Manickam Tagore: விஜய் முதலமைச்சராவதை உதயநிதி தடுக்க முயற்சித்தார் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
Manickam Tagore: விஜய் முதலமைச்சராவதை உதயநிதி தடுக்க முயற்சித்தார் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

Published on: May 24, 2026 at 6:14 pm
சென்னை, மே 24, 2026: காங்கிரஸ் மக்களவை மாணிக்கம் தாகூர் அளித்த அதிரடி பேட்டியில், “உதயநிதி ஸ்டாலின், விஜய் முதல்வராக வருவதைத் தடுக்க கடுமையாக முயன்றார்” என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, தினத்தந்தி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் மாணிக்கம் தாகூர் எம்.பி, உதயநிதி ஸ்டாலின், விஜய் முதல்வராக வருவதைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் செய்தார்” என்றார். மேலும், “காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை விஜயை எதிர்த்து செயல்படச் செய்தார்” எனவும் மாணிக்கம் தாகூர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மாணிக்கம் தாகூரின் இந்தப் பேட்டியால், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உறவுகள் குறித்து புதிய விவாதம் எழுந்துள்ளது. தி.மு.க. இளைஞரணி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது நேரடி குற்றச்சாட்டு வைக்கப்பட்டதால், தமிழக அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. தி.மு.க.–காங்கிரஸ் உறவில் பிளவு ஏற்பட்ட நிலையில், இது தொடர்பான கருத்துக்கள் தற்போது மிக அதிகளவில் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : காங்கிரஸ் டூ பா.ஜ.க.., தி.மு.க. வரலாறை சொல்லட்டுமா.. திருநாவுக்கரசர்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com