Arjun Tendulkar : அர்ஜுன் தெண்டுல்கர் தனது நீண்டநாள் காத்திருப்பை முடித்து, ஐ.பி.எல் 2026-இல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக பஞ்சாப் கிங்ஸ் எதிரான போட்டியில் அறிமுகமானார்.
Arjun Tendulkar : அர்ஜுன் தெண்டுல்கர் தனது நீண்டநாள் காத்திருப்பை முடித்து, ஐ.பி.எல் 2026-இல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக பஞ்சாப் கிங்ஸ் எதிரான போட்டியில் அறிமுகமானார்.

Published on: May 24, 2026 at 10:51 am
புதுடெல்லி, மே 24, 2026: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கரின் மகன், அர்ஜுன் தெண்டுல்கர் தனது நீண்டநாள் காத்திருப்பை முடித்து, ஐ.பி.எல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக பஞ்சாப் கிங்ஸ் எதிரான போட்டியில் அறிமுகமானார்.
இந்த போட்டி, லக்னோ அணியின் கடைசி லீக் ஆட்டமாக இருந்தாலும், பஞ்சாப் அணியின் பிளேஆஃப் வாய்ப்பை தீர்மானிக்கும் முக்கியமான சந்தர்ப்பமாக அமைந்தது.
அர்ஜுன் தெண்டுல்கர் அறிமுகம்
நேற்று சனிக்கிழமை (மே 23, 2026), லக்னோ எகானா ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் அர்ஜுன் தெண்டுல்கர் அணியில் இடம்பெற்றார். இந்நிலையில், லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த், டாஸ் நேரத்தில் அர்ஜுன் மற்றும் அர்ஷின் குல்கர்னி அணியில் சேர்க்கப்பட்டதாக அறிவித்தார். இது, லக்னோ அணியின் கடைசி லீக் போட்டி என்பதால், புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
முன்னதாக, அர்ஜுன் தெண்டுல்கர், ஐ.பி.எல் 2023-இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமானார். இதில், அவர் மொத்தம் 5 போட்டிகளில் 3 விக்கெட்டுகள் எடுத்தார்; எகானமி ரேட் 9.37 ஆக காணப்பட்டது.
இந்நிலையில், ஐ.பி.எல் 2026-க்கு முன், அவர் ₹30 லட்சம் மதிப்பில் லக்னோ அணிக்கு மாற்றப்பட்டார். அர்ஜுன், உள்நாட்டு கிரிக்கெட்டில் கோவா அணிக்காக விளையாடியுள்ளார். மேலும், அவர் ரஞ்சி டிரோபி அறிமுக போட்டியில் சதம் அடித்துள்ளார். இவர் சிறந்த ஆல் ரவுண்டர் ஆக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இவ்வளவு திங்கிங் ஆகாது பென் ஸ்டோக்ஸ்.. நாசர் ஹுசைன் எச்சரிக்கை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com