2 லட்சம் கோடி கடன்.. 70 ஆயிரம் ஊழியர்கள் மட்டுமே பணி.. அமைச்சர் நிர்மல் குமார்

TN Faces Power Sector Crisis : தமிழ்நாட்டில் 1.40 லட்சம் மின்சார ஊழியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 70 ஆயிரம் பேர் மட்டுமே பணியில் உள்ளனர்; மின்சார துறையில் 2 லட்சம் கோடி கடன் உள்ளது என அத்துறை அமைச்சர் சி.டி நிர்மல் குமார் கூறியுள்ளார்.

Published on: May 23, 2026 at 11:09 pm

சென்னை, மே 23, 2026: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று (மே 23, 2026) செய்தியாளர்களிடம் பேசுகையில், “நம்முடைய தேவைக்கேற்ப மின்சாரம் கையிருப்பில் உள்ளது; தட்டுப்பாடுகள் எதுவும் இல்லை” எனத் தெரிவித்தார்.

மேலும், திடீர் மின்வெட்டை முழுமையாக சீரமைக்கும் பணிகள் படிப்படியாக தொடங்கும் என உறுதியளித்தார். தொடர்ந்து, சில இடங்களில் லோடு குறைவால் ஃபியூஸ் ஆஃப், சில இடங்களில் லோடு அதிகரிப்பால் ட்ரிப்பிங் ஏற்பட்டதாக கூறினார். மேலும், பழைய டிரான்ஸ்பார்மர்கள், கேபிள் பிழைகள், குழி தோண்டுதல் போன்ற காரணங்களால் மின்சார தடைகள் ஏற்பட்டதாகவும் விளக்கமளித்தார்.

இதற்கிடையில், தனிநபர்களின் தவறுகளால் ஏற்பட்ட தடைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், “சென்னையில் மட்டும் ஏழு ராபிட் டீம்கள் அமைக்கப்பட்டு, இன்ஜினியர்கள் உடனடியாக பழுதுகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சீப் இன்ஜினியர் நிலை அதிகாரிகள் சப்ஸ்டேஷன்களில் நேரடியாக ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். பெரும்பாலான இடங்களில் ஏற்பட்ட டெக்னிக்கல் பிரச்சினைகள் உடனடியாக சரிசெய்யப்பட்டன” என்றார்.

மின்சார கடன்- பிரச்னை

மின்சார கடன்கள் மற்றும் சவால்கள் குறித்து பேசுகையில் அமைச்சர், “மின்சார வாரியம் கடந்த 20 ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் இருந்து, தற்போது சுமார் 2 லட்சம் கோடி கடனில் உள்ளது. 1,40,000 பேர் வேலை செய்ய வேண்டிய இடத்தில், தற்போது 70,000 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்” என்றார். மேலும், புதிய சப்ஸ்டேஷன்கள், டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் பணிகள் தாமதமாகியுள்ளதால், மின்துறை சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : தி.மு.க. கூட்டணியை காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை.. தொல். திருமாவளவன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com