மதம் மாறிய முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க சட்டத் திருத்தம்.. அமைச்சர் நிர்மல் குமார் உறுதி!

Muslim Reservation Protection: மதம் மாறிய முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

Published on: October 19, 2026 at 12:30 pm

சென்னை, அக்.19, 2026: மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆர். நிர்மல் குமார், பிற மதங்களில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்கள், தங்களது முந்தைய சாதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டைப் பெற முடியாது என்ற சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அண்மையில் உறுதி செய்தது. இதையடுத்து, தமிழக அரசின் 2024ஆம் ஆண்டு அரசாணை தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

முஸ்லிம் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே, மதம் மாறியவர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான அரசாணை குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் முதலமைச்சரின் ஒப்புதலுடன் சட்டத் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகக் கூறி முந்தைய திமுக ஆட்சியை அமைச்சர் விமர்சித்தார். அதேபோல், முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க மறுத்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் அவர் விமர்சித்தார்.

இதையும் படிங்க : சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. அக்.19, 20 முழு அட்டவணை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com