Flower Price Hike : ஆயுத பூஜை எதிரொலியாக தமிழகத்தில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வை சந்தித்துள்ளன.
Flower Price Hike : ஆயுத பூஜை எதிரொலியாக தமிழகத்தில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வை சந்தித்துள்ளன.

Published on: October 19, 2026 at 12:28 pm
Updated on: October 19, 2026 at 1:24 pm
சென்னை, அக்.19, 2026: ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மலர் சந்தைகளில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பொதுமக்களும் வியாபாரிகளும் அதிக அளவில் பூக்களை வாங்கக் குவிந்தனர். அக்டோபர் 17-ஆம் தேதி காலையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், பின்னர் ரூ.1,500 ஆகக் குறைந்தது.
மதுரை சந்தையில் பிச்சிப்பூ கிலோ ரூ.900 முதல் ரூ.1,000 வரையிலும், முல்லைப்பூ ரூ.800 முதல் ரூ.900 வரையிலும், கனகாம்பரம் ரூ.1,500 முதல் ரூ.1,800 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. பன்னீர் ரோஜா கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரையிலும், சம்பங்கி ரூ.300 முதல் ரூ.350 வரையிலும் விற்பனையானது.
பண்டிகைக் காலத்தில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதுடன், தொடர்ந்து பெய்து வரும் மழையால் பூக்களின் வரத்து பாதிக்கப்பட்டால் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆயுத பூஜைக்காக பூக்கள் வாங்கச் செல்லும் பொதுமக்கள் விலை உயர்வை எதிர்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க : ஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் நிகர லாபம் 4.7% உயர்வு.. ரூ.19,510 கோடி பதிவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com