தமிழக அரசியலை லாட்டரி குடும்பம் ஆள்கிறது.. தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி

RS Bharathi : தமிழ்நாடு அரசியலை லாட்டரி குடும்பம் ஆள்கிறது என தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Published on: May 23, 2026 at 9:16 pm

சென்னை, மே 23, 2026: “லாட்டரி குடும்பம் தமிழ்நாடு அரசியலை ஆள்கிறது” என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி.

சென்னையில் உள்ள தி.மு.க. தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ் பாரதி, “இப்போது தமிழ்நாடு அரசியல் ஒரு லாட்டரி குடும்பத்தின் கையில் சென்றுவிட்டது; அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்கள் வடிவமைத்த அரசியல் இன்று வணிகக் குடும்பத்தின் ஆதிக்கத்தில் இருப்பது துரதிர்ஷ்டம்” என்றார்.

எங்களுக்கு புதிதல்ல

மேலும், தேர்தலுக்குப் பிறகு தி.மு.க உறுப்பினர்கள் பிற கட்சிகளில் சேர்ந்தது குறித்து கேட்கப்பட்டபோது, பாரதி, “இது எங்களுக்கு புதிதல்ல” என்றார். மேலும், “தி.மு.க பல்வேறு அரசியல் சூழ்நிலைகளை கடந்துள்ளது. தேர்தல் தோல்விக்குப் பிறகும் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, டிஎம்கே ஒரு ஓடும் நதி போல; தேர்தல் முடிவுகள் மட்டும் அரசியல் இயக்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது” எனவும் பாரதி கூறினார். இதற்கிடையில், கட்சியின் ஒற்றுமை மற்றும் அரசியல் ஒழுக்கம் காக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி.. அதிகாரத்தில் வி.சி.க.. தொல். திருமாவளவன் மகிழ்ச்சி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com